நிஜமா நிஜமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & திப்புதேவாவிரும்புகிறேன்

Nijama Nijame Song Lyrics in Tamil


குழு : சிரிச்சா சிரிப்பு வராதடி தோழி…
அழுதா அழுக வராதடி தோழி…
காயம் பட்டாலும் வலிக்காதடி தோழி…
தீ பட்ட விரலும் தித்திக்கும் தோழி…

ஆண் : வஞ்சிக்கொடி வாய்த்ததடி…
வயசு பொண்ணுக்குள் முளைத்த புதிய தேசமடி…
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி…
இது தான் காதல் அறிகுறி என்று அறிஞ்சிக்கடி…

BGM

பெண் : நிஜமா நிஜமே… சுமையா சுகமே…
நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…
நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்பவில்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பந்த பாசம்விடவும் இந்த நேசம் பெரிதாய்…
எந்தன் மனம் எண்ணுகின்றதே தோழா…

பெண் : நிஜமா நிஜமே நிஜமா…

BGM

பெண் : பாறாங்கல் மார்பழகா பாலாடை நிறத்தழகா…
பள்ளி கொள்ள உன் மார்பு போதும்…
கோயில் சிலை அழகா கொலை செய்யும் கண்ணழகா…
கூத்தாட உன் அழகு போதும்…

பெண் : கொஞ்சுடா கொஞ்சம் அள்ளி துள்ள வாடா…
அஞ்சு நாள் சொர்க்கம் தினம் தானம் தாடா…

ஆண் : காதல் வந்தால் வெட்கம் வெளியே போய்விடுமா…
மான்களுக்கும் புலி போல் ஆசை தோன்றிடுமா… ஹஹ

ஆண் : நிஜமா நிஜமே நிஜமா…

—BGM—

குழு : வஞ்சிக்கொடி வாய்த்ததடி…
உனக்குள் முளைத்த புதிய தேசமடி…
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி…
இதுதான் காதல் அறிகுறி…

பெண் : அரும்பாக இருந்த உள்ளம் இரும்பாக மாறுவது…
உன்னாலே நான் அடைந்த மாற்றம்…

ஆண் : இரும்பாக இருந்த உள்ளம் கரும்பாக மாறுவது…
உன்னாலே நான் அடைந்த மாற்றம்…

பெண் : கொஞ்ச நாளிலே உள்ளம் மாறி போனேன்…
கொஞ்சி காட்டவா பாதி ஆணாய் ஆனேன்…

ஆண் : காதலியே உன்னில் பாதி நானடியே…
கருவிழியே இனி இருவர் வழி ஒரு வழியே… ஹேஹே…

ஆண் : நிஜமா…
பெண் : நிஜமே…
ஆண் : சுமையா…
பெண் : சுகமே…

பெண் : நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…

ஆண் & பெண் : நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்ப வில்லை…

ஆண் & பெண் : பந்த பாசம் விடவும் இந்த நேசம் பெரிதாய்…
எந்தன் மனம் எண்ணுகின்றதே…
பெண் : தோழா…
ஆண் : தோழி…


Notes : Nijama Nijame Song Lyrics in Tamil. This Song from Virumbugiren (2002). Song Lyrics penned by Vairamuthu. நிஜமா நிஜமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading