நிபுணா நிபுணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்சாதனா சர்கம்ஸ்ரீகாந்த் தேவாகுத்து

Nibuna Nibuna Song Lyrics in Tamil


BGM

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா…
மனம் படித்திடும் புது நிபுணா…
மதனா மதனா மன்மதனா…
என்னை மடக்கிய மந்திரன்னா…

பெண் : உன்னை முதல் முறை…
முதல் முறை பார்த்தேன்…
நீயும் எனக்கென பிறந்ததை உணர்ந்தேன்…

பெண் : நீ பலமுறை தொடர்வதை அறிந்தேன்…
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்…
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்…

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா…
மனம் படித்திடும் புது நிபுணா…
மதனா மதனா மன்மதனா…
என்னை மடக்கிய மந்திரன்னா…

BGM

பெண் : ஒரு பார்வை பார்க்கின்றாய்…
உயிர் சுண்டி இழுக்கின்றாய்…
உன்னை எண்ணில் விதைக்கின்றாய்…
சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்…

பெண் : நெருப்பாக கொதிக்கின்றாய்…
மறு நொடியே குளிர்கின்றாய்…
உறக்கத்தை கெடுக்கின்றாய்…
மனதில் நுழைந்து குதிக்கின்றாய்…

பெண் : உடைகள் இன்றி இருப்பதனால்…
நிலவை நீ அணுகின்றாய்…
நிலவாய் என்னை நினைப்பதனால்…
உடைகள் உனக்கு எதற்கென்றாய்…

பெண் : அடடா நீதான் அலைகின்றாய்…
எதையோ நினைத்து சிரிக்கின்றாய்…
முழு தரிசனம் காண பறக்கின்றாய்…

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா…
மனம் படித்திடும் புது நிபுணா…
மதனா மதனா மன்மதனா…
என்னை மடக்கிய மந்திரன்னா…

BGM

பெண் : எதிர்பாரா நேரத்திலே…
எதிர்கொண்டு அனைத்தாயே…
எதிர்பார்க்கும் சமயத்திலே…
தவிக்க வைத்து ரசித்தாயே…

பெண் : புதிர் போடும் கண்களிலே…
என் மனதை கலைத்தாயே…
அதிசயங்கள் காட்டிடவே…
வில்லாய் என்னையே வளைத்தாயே…

பெண் : வாசல் புள்ளி கோலங்களில்…
பின்னல்கள் போல் நாமே…
இனிமேல் நாம் இருவருமே…
பின்னி பிணைந்து கிடப்போமே…

பெண் : விரலால் இடைமேல் நடந்தாயே…
வேகத்தடைகள் கடந்தாயே…
என் அழகை முழுதாய் அளந்தாயே…

பெண் : நிபுணா நிபுணா என் நிபுணா…
மனம் படித்திடும் புது நிபுணா…
மதனா மதனா மன்மதனா…
என்னை மடக்கிய மந்திரன்னா…

பெண் : உன்னை முதல் முறை…
முதல் முறை பார்த்தேன்…
நீயும் எனக்கென பிறந்ததை உணர்ந்தேன்…

பெண் : நீ பலமுறை தொடர்வதை அறிந்தேன்…
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்…
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேனே… ஏ…

BGM

பெண் : நிபுணா… நிபுணா…


Notes : Nibuna Nibuna Song Lyrics in Tamil. This Song from Kuththu (2004). Song Lyrics penned by Kalaikumar. நிபுணா நிபுணா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top