நேற்று வரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Netru Varai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

ஆண் : அனலாகவே வேகும் பனிபோல மோதும்…
மழை கால மேகம் கண்டேன்…
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்…
உனை தேடி கண்டு கொண்டேன்…

ஆண் : பேசும் போதிலே கேளா ஒலி…
பார்வை ஆகுமே தீபாவளி…
உன்னை போல யாருமில்லை என் இறைவி…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

—BGM—

ஆண் : மௌனம் என்னும் உன் மொழியில்…
மழலையாய் ஆகி பேசுகிறாய்…
ஒலிகளினால் நம் உலகில்…
கவிதை சாயம் பூசுகிறாய்…

ஆண் : கனவா நனவா தெரியா நிலையே…
பகலாய் இரவாய் பழகும் கலையே…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

—BGM—

ஆண் : என்னது காற்றில் நீ கரைந்தாய்…
என்னது வானம் நீ அளந்தாய்…
என்னது வாசல் நீ திறந்தாய்…
எனது ஓசை நீ உணர்ந்தாய்…

ஆண் : ஒரு நாள் நிழலாய்…
தரையில் இருந்தாய்…
பிறகு என் மனதில்
நிலவாய் நிறைந்தாய்…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…


Notes : Netru Varai Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Thamarai. நேற்று வரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading