நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி.மகாதேவன்என் அண்ணன்

Nenjamundu Nermaiyundu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹோய்… நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…

ஆண் : அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா…

ஆண் : ஹே… நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு…
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு…
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு…
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு…

ஆண் : கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு…
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு…
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு… ஹோய்…

ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…

BGM

ஆண் : அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி…
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி…
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி…
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி…

ஆண் : பொன்னான உலகென்று பெயருமிட்டால்…
பொன்னான உலகென்று பெயருமிட்டால்…
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்… ஹோய்…

ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…

BGM

ஆண் : உண்டு உண்டு என்று நம்பி காலை எடு…
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு…
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு…
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு…

ஆண் : ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து…
ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து…
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து…

ஆண் : ஹோய்… நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…

ஆண் : அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா…

ஆண் : ஹோய்… நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…


Notes : Nenjamundu Nermaiyundu Song Lyrics in Tamil. This Song from En Annan (1970). Song Lyrics penned by Kannadasan. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading