கடவுள் ஏன் கல்லானார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி.மகாதேவன்என் அண்ணன்

Kadaul Yen Kallaanaar Song Lyrics in Tamil


ஆண் : கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…

BGM

ஆண் : கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்…
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்…
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்…
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்…

ஆண் : இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்…
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்…
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்…
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்…

குழு : கடவுள் ஏன் கல்லானார்…
ஆண் : மனம் கல்லாய் போன மனிதர்களாலே…

BGM

ஆண் : நெஞ்சுக்கு தேவை மனசாட்சி…
அது நீதி தேவனில் அரசாட்சி…
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி…
அது நீதி தேவனில் அரசாட்சி…

ஆண் : அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி…
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி…
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி…
அரங்கத்தில் வராது அவன் சாட்சி…

ஆண் : கடவுள் ஏன் கல்லானார்…
குழு : மனம் கல்லாய் போன மனிதர்களாலே…

BGM

ஆண் : சதி செயல் செய்தவன் புத்திசாலி…
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி…
சதி செயல் செய்தவன் புத்திசாலி…
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி…

ஆண் : உண்மையை சொல்பவன் சதிகாரன்…
உண்மையை சொல்பவன் சதிகாரன்…
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்…
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்…

ஆண் : கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…

குழு : கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…


Notes : Kadaul Yen Kallaanaar Song Lyrics in Tamil. This Song from En Annan (1970). Song Lyrics penned by Kannadasan. கடவுள் ஏன் கல்லானார் பாடல் வரிகள்.


Scroll to Top