நீலாங்கரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & சைந்தவிஎன்.ஆர்.ரகுநந்தன்புலிவால்

Neelangarayil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…

பெண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…

ஆண் : உடம்பிலிருந்து உசுர மட்டும்…
உருவி உருவி எடுக்காதே…

பெண் : மாசம் மாசம் டீசல் விலை போல்…
ஆச பாசம் ஏத்தாதே…

ஆண் : புடவை துவைக்கும் துறவிய போல…
முழியா முழிக்குறேன்…

பெண் : புலிவால் புடிச்ச எலிய போல…
தவியா தவிக்குறேன்…

ஆண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…

பெண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…

—BGM—

ஆண் : பட்டா போட்ட தங்கக் கட்டி…
பட்டாம்பூச்சி போட்ட குட்டி…
ஒத்து போகும் காதலியெல்லாம்…
பிஃப்டி பிஃப்டி பொண்டாட்டி…

பெண் : கன்னிப்பொண்ண ஓரம் கட்டி…
கன்னங்கிள்ளி கண்ண கட்டி…
காதல் பண்ணும் பூனை குட்டி…
எட்டி நில்லு நான் கெட்டி…

ஆண் : காதல் எறும்பு ஊரும் போது…
கல்லும் கூட தேயுமே…
தூரம் பார்த்து நின்ற பெண்மை…
தோளில் வந்து சாயுமே…

பெண் : நீ தொட தொட…
உச்சந்தலை கொதிக்குது…
விரல் பட பட…
உள்ளங்கால் குளிருது…

ஆண் : நீ சண்டைக்காரி ஆகும்போது பதறுது…
என் மண்டைக்குள்ள நட்சத்திரம் சிதறது…

பெண் : புலிவால் புடிச்ச எலிய போல…
தவியா தவிக்குறேன்…

ஆண் : புடவை துவைக்கும் துறவிய போல…
முழியா முழிக்குறேன்…

பெண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…

ஆண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…

—BGM—

பெண் : செல்போன் மொழி பேசி பேசி…
சின்ன பொண்ண கெடுக்காதே…
நூலாம்படை நூலை கட்டி…
கோயில் தேரை இழுக்காதே…

ஆண் : வெள்ளக்காரன் போகும்போதே…
வெட்கம் கூட போயே போச்சே…
காலம் இப்போ ஹைடெக் ஆச்சே…
கைய விட்டு போகாதே…

பெண் : ஓ… பெண்கள் கொண்ட ஆசையெல்லாம்…
ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல…
ஆண்கள் கொண்ட ஆசையெல்லாம்…
வெயிலில் வைத்த வெண்ணை போல…

ஆண் : நீ வர வர வக்கீலுக்கு படிக்குற…
நீ வாதம் பண்ணி வாதம் பண்ணி ஜெய்க்குற…

பெண் : நீ முட்டாளுனு நம்பவச்சு நடிக்குற…
உன் முட்ட கண்ணில்…
ரெட்ட முயல் புடிக்குற…

ஆண் : புடவை துவைக்கும் துறவிய போல…
முழியா முழிக்குறேன்…

பெண் : புலிவால் புடிச்ச எலிய போல…
தவியா தவிக்குறேன்…

ஆண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…

பெண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…

ஆண் : உடம்பிலிருந்து உசுர மட்டும்…
உருவி உருவி எடுக்காதே…

பெண் : மாசம் மாசம் டீசல் விலை போல்…
ஆச பாசம் ஏத்தாதே…

ஆண் : புடவை துவைக்கும் துறவிய போல…
முழியா முழிக்குறேன்…

பெண் : புலிவால் புடிச்ச எலிய போல…
தவியா தவிக்குறேன்…

ஆண் : நீலாங்கரையில் கானாங்குருவி…
தானா தவிக்குதே…

பெண் : வானம் திறந்து…
வையம் கடந்து…
பறப்போம் காற்றிலே…


Notes : Neelangarayil Song Lyrics in Tamil. This Song from Pulivaal (2014). Song Lyrics penned by Vairamuthu. நீலாங்கரையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading