எங்கே இருந்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராஸ்ரீகாந்த் தேவாதெனாவட்டு

Enge Irundhai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கே இருந்தாய்…
எங்கே இருந்தாய்…
எப்படி நீயும் என்னுள் வந்தாய்…

ஆண் : கண்ணில் விழுந்தாய்…
நெஞ்சில் நுழைந்தாய்…
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்…

ஆண் : உன்னை பார்க்கும் முன்பு நான்…
காகிதத்தின் வெண்மையடி…
உன்னை பார்த்த பின்பு நான்…
வானவில்லின் வண்ணமடி…

ஆண் : தோளில் சாயும் போது…
தோழி நீயடி…
மடியில் சாயும் போது…
தாயும் நீயடி…

ஆண் : எங்கே இருந்தாய்…
எங்கே இருந்தாய்…
எப்படி நீயும் என்னுள் வந்தாய்…

ஆண் : கண்ணில் விழுந்தாய்…
நெஞ்சில் நுழைந்தாய்…
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்…

—BGM—

ஆண் : என் வீட்டு தோட்டத்தில்…
பூக்கின்ற பூவெல்லாம்…
பறிக்கத்தான் ஆள் இன்றி…
செடியில் உதிருமடி…

ஆண் : உன்னை நான் பார்த்தவுடன்…
உனக்காக ஆசையுடன்…
கை விரல்கள் கேட்காமல்…
பறித்திட போகுதடி…

ஆண் : என் இதயம் முழுதும்…
விதையாய் விழுந்தாய்…
வெறும் விதை என்று…
விட்டு விட்டு சென்றாய்…

ஆண் : விருட்சத்தை போல…
நீ வளர்ந்து நின்றாய்…
தோளில் சாயும் போது…
தோழி நீயடி…
மடியில் சாயும் போது…
தாயும் நீயடி…

ஆண் : எங்கே இருந்தாய்…
எங்கே இருந்தாய்…
எப்படி நீயும் என்னுள் வந்தாய்…

ஆண் : கண்ணில் விழுந்தாய்…
நெஞ்சில் நுழைந்தாய்…
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்…

—BGM—

ஆண் : என் பெயரை கேட்டாலே…
உன் பெயரை சொல்கின்றேன்…
எப்போதும் என் நினைவு…
உன்னை சுற்றுதடி…

ஆண் : எதிரே யார் வந்தாலும்…
நீயென்று குழம்புகிறேன்…
உன்னாலே என் மனதில்…
மின்னல் வெட்டுதடி…

ஆண் : உயிரில் கலந்தாய்…
உணர்வில் நுழைந்தாய்…

ஆண் : எந்தன் வீடு என்று…
என்னை விட்டு விட்டு சென்று…
உந்தன் பின் வந்து…
உன்னை தொடர்கிறதே…

ஆண் : தோளில் சாயும் போது…
தோழி நீயடி…
மடியில் சாயும் போது…
தாயும் நீயடி…

ஆண் : எங்கே இருந்தாய்…
எங்கே இருந்தாய்…
எப்படி நீயும் என்னுள் வந்தாய்…

ஆண் : கண்ணில் விழுந்தாய்…
நெஞ்சில் நுழைந்தாய்…
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்…

ஆண் : உன்னை பார்க்கும் முன்பு நான்…
காகிதத்தில் பொம்மையடி…
உன்னை பார்த்த பின்பு நான்…
பால்நிலவின் வண்ணமடி…

ஆண் : தோளில் சாயும் போது…
தோழி நீயடி…
மடியில் சாயும் போது…
தாயும் நீயடி…

—BGM—


Notes : Enge Irundhai Song Lyrics in Tamil. This Song from Thenavattu (2008). Song Lyrics penned by Na. Muthukumar. எங்கே இருந்தாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading