நீ சிரிச்சாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சாதனா சர்கம், ஜொனிடா காந்தி & ஸ்ரீநிஷாஹிப் ஹாப் தமிழாஆக்‌ஷன்

Nee Sirichalum Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நினைச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…

பெண் : நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
கையில் அணைச்சாலும்…
மண்ணில் பொதைச்சாலும்…

பெண் : ஏதோ நீ செய்கிறாய் யுக்தி…
நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி…
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நானோ உன் பார்வையில் சிக்கி…
சொல்ல முடியாமலே திக்கி…
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி…

பெண் : நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நினைச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…

குழு : தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…
தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…

பெண் : தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…
தன தீம் தீம் தானா…
தன தீம் தீம் தானா…

BGM

பெண் : புதைத்து வைத்த காதலை பூக்களுக்குள் தேடவா…
கூட வந்த ஆசையை கூந்தலுக்குள் சூடவா…

பெண் : நெஞ்சிருக்கும் வரைக்குமே உன் நினைவு இருக்குமே…
காற்றிலா வெளியிலே காத்துகிடக்கிறேன் நான்…

பெண் : நீ மௌனமாகவே நடந்து போகிறாய்…
காயம் செய்து கொண்டே…
உன்னில் காதல் இல்லை என தோழி போலவே…
என்னை மாற்றி கொண்டேன்…

பெண் : இவன் தோளில் சாய்ந்தே…
நான் தொலைந்தால் என்ன…
இவன் மடியில் தூங்கி…
நான் மடிந்தால் என்ன…

பெண் : இவன் தோளில் சாய்ந்தே…
நான் தொலைந்தால் என்ன…
இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன…

BGM

பெண் : தினம் உன்ன நினைச்சே…
இரு கண்ண முழிச்சேன்…
உன்ன ஒட்டி அணைச்சே…
கனவுல கட்டி புடிச்சேன்…

பெண் : உன் கண்ணு முழியில் என்ன கண்டு புடிச்சேன்…
உன்ன மட்டும் நினைச்சேன்…
தினம் செத்து பொழைச்சேன்…

பெண் : கை வீசும் காதலே…
என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ…
இந்த பாலை வெயிலில்…
பார்வை இன்றியே என்னை கொல்கிறாயோ…

பெண் : இவன் தோளில் சாய்ந்தே…
நான் தொலைந்தால் என்ன…
இவன் மடியில் தூங்கி நான் மடிந்தால் என்ன…

பெண் : நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நினைச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…

பெண் : நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
கையில் அணைச்சாலும்…
மண்ணில் பொதைச்சாலும்…

பெண் : ஏதோ நீ செய்கிறாய் யுக்தி…
நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி…
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி…

பெண் : நானோ உன் பார்வையில் சிக்கி…
சொல்ல முடியாமலே திக்கி…
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி…

குழு : தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…
தத்தோம் தன தித்தோம்…
தன தித்தோம் தன தீம் தீம் தானா…
தன தீம் தீம் தானா…
தன தீம் தீம் தானா…


Notes : Nee Sirichalum Song Lyrics in Tamil. This Song from Action (2019). Song Lyrics penned by Pa. Vijay. நீ சிரிச்சாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading