நாடோடி நாடோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா, ஏ.எல்.ராகவன் & L.R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்அன்பே வா

Nadodi Nadodi Song Lyrics in Tamil


ஆண் : ஏய்…
குழு : ஏய்…
ஆண் : நாடோடி…
குழு : நாடோடி…
ஆண் : போக வேண்டும் ஓடோடி…
குழு : ஓடோடி…

ஆண் : ஏ…
குழு : ஏ…
ஆண் : வாயாடி…
குழு : வாயாடி…
ஆண் : போக வைப்போம் போராடி…
குழு : போராடி…
ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…

—BGM—

ஆண் : வச்சா குடுமி அடிச்சா மொட்டை…
எல்லாம் எங்கள் கையிலே…
பிடிச்சா பைத்தியம் முடிச்சா வைத்தியம்…
எல்லாம் எங்கள் பையிலே…

ஆண் : மந்திரவாதி தந்திரவாதி எந்திரவாதி என்ற ஜாதி…
எங்களோடு போட்டி போட வா…
நீ கால் மடக்கி கை மடக்கி மூச்சடிக்கி பேச்சடிக்கி…
எங்களோடு ஆட்டம் ஆட வா…

ஆண் : ஹேய்… எந்த ஊர்… என்ன பேர்…
எந்த காலேஜ்… என்ன க்ரூப்…

ஆண் : ட்விஸ்ட் டான்ஸ் தெரியுமா…
டெஸ்ட் மேட்ச் புரியுமா…
ஆட்டம் ஆடி வழக்கமா…
பாட்டு பாடி பழக்கமா…
கவிஞனா… ரசிகனா…
கம்பனா… கொம்பனா நீ…

ஆண் : வாட் எ லக்கி டே…
குழு : வாட் எ லக்கி டே…
வாட் எ லக்கி டே…

பெண் : ஹேய்…
குழு : ஹேய்…
பெண் : நாடோடி…
குழு : நாடோடி…
பெண் : போக வேண்டும் ஓடோடி…
குழு : ஓடோடி…

பெண் : ஹே ஹே…
குழு : ஹே ஹே…
பெண் : வாயாடி…
குழு : வாயாடி…
பெண் : போக வைப்போம் போராடி…
குழு : போராடி…
ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…

பெண் : சிரிச்சா சிரிப்போம்…
மொறச்சா மொறைப்போம்…
எல்லாம் எங்கள் கண்ணிலே…

பெண் : நெனைச்சா நெனைப்போம்…
மறந்தா மறப்போம்…
எல்லாம் எங்கள் நெஞ்சிலே…

பெண் : ஆ… ராமன் என்ன பீமன் என்ன…
கண்ணன் என்ன மன்னன் என்ன…
பெண்களோடு போட்டி போட வா…

பெண் : ஆ… தேன் இருக்கும் மொழி இருக்கும்…
மீன் இருக்கும் விழி இருக்கும்…
எங்களோடு ஆட்டம் ஆட வா…

ஆண் : வாட் எ லக்கி டே…
குழு : வாட் எ லக்கி டே…
வாட் எ லக்கி டே…

ஆண் : புலியை பார் நடையிலே…
புயலை பார் செயலிலே…
புரியும் பார் முடிவிலே…
விரட்டினால் முடியுமா…
மிரட்டினால் படியுமா…

ஆண் : உலகில் உள்ள நாடுகளில்…
என் கண்கள் படாத இடம் இல்லை…
உங்களை போல கும்பலும் கூச்சலும்…
பார்வையில் இதுவரை படவில்லை…

குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…

ஆண் : புலியை பார் நடையிலே…
புயலை பார் செயலிலே…
புரியும் பார் முடிவிலே…
விரட்டினால் முடியுமா…
மிரட்டினால் படியுமா…

—BGM—

ஆண் : உங்கள் ஊர்… எந்த ஊர்…
அந்த ஊர் எனது ஊர்…
நான் யார் தெரியுமா…
எடுத்து சொன்னால் புரியுமா…

ஆண் : கண்ணெடுத்து பாருங்கள்…
காதெடுத்து கேளூங்கள்…
நல்லவருக்கு நல்லவன்…
கெட்டவருக்கு கெட்டவன் நான்…

—BGM—

ஆண் : ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்…

—BGM—

ஆண் : ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்…
டெஸ்ட் மேட்ச் பாருங்கள்…
நானும் அன்று மாணவன்…
நாலும் கற்று தெரிந்தவன்…
பறவை போல் பறந்தவன்…
கவலைகள் மறந்தவன் நான்…

ஆண் : ஏய்…
குழு : ஏய்…
ஆண் : நாடோடி…
குழு : நாடோடி…
ஆண் : போக வேண்டும் ஓடோடி…
குழு : ஓடோடி…

ஆண் : வெவ்வே…
குழு : வெவ்வே…
ஆண் : வாயாடி…
குழு : வாயாடி…
ஆண் : போக வைப்போம் போராடி…
குழு : போராடி…
ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…


Notes : Nadodi Nadodi Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. நாடோடி நாடோடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading