நானாக நானும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாகபில் கபிலன்ஜிப்ரான்Weapon

Naanaga Naanum Illai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நானாக நானும் இல்லை…
நீயாக நீயும் இல்லை…
நாமாக நாமும் வாழ தவக்கோலமே…

ஆண் : யாரோடும் பேதம் இல்லை…
போராடும் தேவை இல்லை…
நீரோடி பாதை ஒன்றை உருவாக்குமே…

ஆண் : மொழி ஏதும் தேவை இல்லை…
முகமூடி போடவுமில்லை…
இயல்பாக பாசம் உண்டு…
அது போதுமே அது போதுமே…

ஆண் : வாழ்வோடு கேள்வி இல்லை…
வாலாட்டும் பிள்ளையே…
தீராத பாடல் ஒன்றில் இளைபாரவா… ஆ…

—BGM—

ஆண் : மழைக்காற்றில் வழிந்திடும் தனி ஊற்றே…
கரைந்தேனே மீண்டும் பிறந்தேனே…

ஆண் : சதிவேலை ஏதும் இங்கில்லை…
சுயமாக இருப்பேனே…
பிடிக்காத வாழ்வை வாழாமல்…
தெளிவாக உணர்ந்தேனே…

ஆண் : துணை நீ துணை நீ…
மாபெரும் நிலை நீ நிலை நீ…
மகள் நீ மகன் நீ…
ஆடிடும் துதிக்கையில் மலர் நீ…
காட்டிலே உயிர் தோழன் நீ…

ஆண் : தூங்கினால் எனை சீண்டுவாய்…
தலை கோதினால் சிறு பூவாவாய்…
பாசமாய் எனை தீண்டுவாய்…
உன்னை ஏசினால் சிலை போல் ஆவாய்…

ஆண் : தீராத தனி தனி தனி உலகம்…
உன்னாலே கண்டேனே…
தீர்ந்தாலும் உனதுர உனது அருகில்…
உன்னோடு இருப்பேனே…

ஆண் : நானாக நானும் இல்லை…
நீயாக நீயும் இல்லை…
நாமாக நாமும் வாழ தவக்கோலமே…

ஆண் : யாரோடும் பேதம் இல்லை…
போராடும் தேவை இல்லை…
நீரோடி பாதை ஒன்றை உருவாக்குமே…

ஆண் : மொழி ஏதும் தேவை இல்லை…
முகமூடி போடவுமில்ல…
இயல்பாக பாசம் உண்டு…
அது போதுமே அது போதுமே…

ஆண் : நானாக நானும் இல்லை…
நீயாக நீயும் இல்லை…
நாமாக நாமும் வாழ தவக்கோலமே…


Notes : Naanaga Naanum Illai Song Lyrics in Tamil. This Song from Weapon (2024). Song Lyrics penned by Karthik Netha. நானாக நானும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading