நான் தொழும் தெய்வமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிசத்ய பிரகாஷ்சாம் சி.எஸ்கார்பன்

Naan Thozhum Deivame Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் தொழும் தெய்வமே…
போகுதே ஏன்…
யார் இனி வாழ்விலே…
ஏங்கினேன் நான்…

ஆண் : ஆகாயம் சாயுதே…
ஆன்மாவும் போகுதே…
அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா…

ஆண் : ஆறாது காயமே…
தீராது சோகமே…
அப்பா என் நெஞ்சமும் தங்கிடுமா…

ஆண் : நீதான் என் உதிரம்…
நீதான் என் உலகம்…
அப்பா…

—BGM—

ஆண் : தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி…
உந்தன் மார்பில் தூங்கினேன்…
கோவில் தேடி போன போதும்…
உன்னைத்தானே வேண்டினேன்…

ஆண் : அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே…
தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே…
நீதான் என் உதிரம்…
நீதான் என் உலகம்…
அப்பா…

—BGM—

ஆண் : பாவம் என்ன நானும் செய்தேன்…
பாசத் தீயில் வேகுறேன்…
மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க…
நானும் மண்ணில் வாழ்கிறேன்…

ஆண் : இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு…
எங்கு சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு…
அப்பா என்கிற ஆணி வேரையும் தொலைச்சேன்…

—BGM—


Notes : Naan Thozhum Deivame Song Lyrics in Tamil. This Song from Carbon (2022). Song Lyrics penned by Arun Bharathi. நான் தொழும் தெய்வமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading