வானே வானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிஹரிசரண்சாம் சி.எஸ்கார்பன்

Vaane Vaane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வானே வானே நீ என் வானே…
நான் போகும் பாதையிலே…
நானே நானே ஏதோ ஆனேன்…
நீ தோளில் சாய்கையிலே…

ஆண் : ஓ என் விழி என் விழியே…
உயிர் உன் இமை ஆகுதே…
உன் மடி சேர்ந்திடவே…
மனம் இடம் பொருள் தினம் மறக்க…

ஆண் : ஐம்புலன் அத்தனையும் உன் கண்களில் சிக்குதே…
ஐவிரல் கோர்த்திடவே என் அகம் புறம் அடம் பிடிக்க…

ஆண் : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

ஆண் & குழு (பெண்கள்) : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

—BGM—

ஆண் : போதுமே இது போதுமே…
என் வாழ்வில்தான் வேறென்ன இனி வேணுமே…
காயமே என் காயமே…
உன் விழி தீண்டும் வரம் கேட்டு ஏங்குதே…

ஆண் : அடி உன் கையில் விளையாடும்…
பொம்மை போல் இருப்பேனே…
உடைத்தாலும் புதைத்தாலும் சிரித்தேனடி…

ஆண் : ஓர் ஜென்மம் போதாது…
உன் விழி பார்த்து நான் வாழ…
பல கோடி ஜென்மங்கள் உன்னோடு…
நான் வாழ வேணும்…

ஆண் : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

—BGM—

ஆண் : நீந்துவேன் நான் நீந்துவேன்…
நீ சொன்னாலே நெருப்பாற்றில் நான் நீந்துவேன்…
ஏந்துவேன் கையில் ஏந்துவேன்…
நான் இறந்தாலும் உன் மூச்சை ஏந்துவேன்…

ஆண் : அடி என் நெஞ்ச அலமாரி…
உனக்காக உரு மாறி…
நீ வந்து குடியேற தவிக்கின்றதே…

ஆண் : கண்ணீரில் கரைகின்ற ஓர் உப்பாக என் ஜீவன்…
உனக்குளே கரைகின்ற மாயங்கள் செய்தாயே நீயும்…

குழு (ஆண்கள்) : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

ஆண் : தேவதை தேவதை நீயே…
தேடியே நீ நுழைந்தாயே…
தேவனும் தெய்வமும் நீயே…
தேவைகள் நீ அறிந்தாயே…

—BGM—


Notes : Vaane Vaane Song Lyrics in Tamil. This Song from Carbon (2022). Song Lyrics penned by Arun Bharathi. வானே வானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading