கானல் நீராய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவேல்பிரதீப் குமார்கோவிந்த் வசந்தாரைட்டர்

Kaanal Neeraai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கானல் நீராய் கடக்கும் வழியில் தெரியும் சுனையே…
வானம் தீண்டும் தன் வாழ்வை மீட்டும் பல விழுதாய்…
யாதும் நீயாய் உலகம் சுழலும் சுழலும் தனியே…
வேரில் நீராய் சேரும் உயிரின் உறவின் நல்வரவே…

ஆண் : தீ எரியும் கிளையின் துளிரும்…
காற்றோடு அது புகையாகும்…
காயாத மழை நாள் வரவில்லை…
எத்தனை எத்தனை உயிர் எழும்பும்…

ஆண் : தன் கன்று முட்டும் வலியை…
தாங்காத பசுதான் உண்டோ…
நானே நீ ஆனது கண்டே…
என் உயிர் உன் உடல் துளிர் நழுவும்…

—BGM—

ஆண் : மாலை வந்தே சூழும்…
நாளை வந்தே தீரும்…
நான் யாரோ தேடும் இருட்டை போல் ஆனேன்…

ஆண் : புல் நிலம் மாறும்…
பூ மழை தூவும்…
காற்றும் நாற்றும் கதிராய் விழையும்…

ஆண் : நீளும் பாதை எங்கே தேடும் சிறகானேன்…
ஆணும் தாயாய் நெகிழும் அன்பில் மெழுகானேன்…
நம்மை சூழும் வாழ்வும் புதிரே நிறையும் எதிரில் என்றும்…
கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே…


Notes : Kaanal Neeraai Song Lyrics in Tamil. This Song from Writer (2021). Song Lyrics penned by Muthuvel. கானல் நீராய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading