| பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கே.எஸ். சித்ரா | சிவா | பூமகள் ஊர்வலம் |
Naan Thayenru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…
என் கண்மணி என்னை தீண்டினால்…
என் கண்ணீர் இனிக்கிறதே…
பெண் : நான் பாட மறந்த ஒரு தாலாட்டு…
இன்று பிள்ளை வடிவில் வந்ததே…
கொஞ்சம் நின்று போயிருந்த என் பூமி…
இன்று மீண்டும் சுழலுகின்றதே…
பெண் : உனை மகனே என்றதும்…
உயிரே மலர்கிறதே…
பெண் : ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…
ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…
பெண் : நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…
—BGM—
பெண் : பிள்ளை தூங்கிடும் அழகை பார்க்கவே…
இரவில் தூங்கவே மாட்டேன்…
—BGM—
பெண் : சின்ன பூவிதழ் கனவில் பேசினால்…
பதிவு செய்யவே பார்ப்பேன்…
—BGM—
பெண் : என் கருவோடு உன்னை சுமக்கவில்லை…
என் உயிரோடு உன்னை சுமந்திருப்பேன்…
என் மகனே உந்தன் மடிமேல் உயிர் துறப்பேன்…
பெண் : ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…
ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…
பெண் : நான் தாய் என்றாகும் முன்னமே…
என் தாய்பால் சுரக்கிறதே…
பெண் : நான் பாட மறந்த ஒரு தாலாட்டு…
இன்று பிள்ளை வடிவில் வந்ததே…
கொஞ்சம் நின்று போயிருந்த என் பூமி…
இன்று மீண்டும் சுழலுகின்றதே…
பெண் : உனை மகனே என்றதும்…
உயிரே மலர்கிறதே…
பெண் : ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…
ஆராரோ ஓ ஆராரோ ஆரீராரோ…
Notes : Naan Thayenru Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. நான் தாய் என்றாகும் பாடல் வரிகள்.

