நான் இனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜா & சின்மயியுவன் ஷங்கர் ராஜாயாக்கை

Naan Ini Kaatril Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நான் இனி காற்றில் நடக்க போகிறேன்…
கூடவே உன் கைகள் கோர்த்து கொள்கிறேன்…

பெண் : இந்த பிரபஞ்சம் தாண்டியே…
ஒரு பயணம் போகலாம்…
அதில் மூச்சு கூட தேவை இல்லை…
முத்தம் ஒன்றில் சேர்ந்து செல்லலாம்…

பெண் : மிதந்து மிதந்து வந்தாய்…
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்…
அசந்து அசந்து நின்றேன்…
ஐயோ அளந்து அளந்து கொன்றாய்…

பெண் : உன் போர்வை இருட்டிலே…
நான் தொலைந்து போகிறேன்…
ஒரு ஜாடை செய்யடா…
உன் பாத சுவட்டில் தூசி போல…
படிகிறேன் மடிகிறேன்…

—BGM—

ஆண் : மெல்லிய சாரலும் மஞ்சளாய் வெயிலும்…
சேர்ந்தது போல்…
உந்தன் வெட்கமும் கோபமும் சேர்ந்ததடி…
தெத்துப்பல் கீறலும் கொஞ்சலடி…
காதலும் இல்லாத காமமும் இல்லாத…
ஓர் நொடி…
பெண் : ஓர் நொடி…

பெண் : பார் சுற்றி பார்…
நம்மை போல் இனி யாரடா காதலிப்பார்…
நீ எந்தன் புத்தகம் மெல்லிசை…
புல்நுனி தேய்பிறை யாவிலும் நீயே…

ஆண் : காட்டிலும் நீ கோவிலும் நீ…
பெண் : தாய் நாடி ஆகிடும் தோழியும் நான்தானே…

ஆண் & பெண் : பாரதி போல் ஆனேன்…
பைத்தியம் போல் ஆனேன் உன்னால் நானே…

பெண் : மிதந்து மிதந்து வந்தாய்…
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்…
அசந்து அசந்து நின்றேன்…
ஐயோ நெளிந்து வளைந்து கொன்றாய்…

ஆண் : உன் கூந்தல் இருட்டிலே…
பெண் : உன் போர்வை இருட்டிலே…
ஆண் : நான் தொலைந்து போகிறேன்…
பெண் : நான் தொலைந்து போகிறேன்…

ஆண் : ஒரு ஜாடை செய்யடி
பெண் : ஒரு ஜாடை செய்யடா…
ஆண் : உன் பாத சுவட்டில் தூசி போல…
படிகிறேன் மடிகிறேன்…

—BGM—

ஆண் : அந்தி மலையில் பச்சை தளிர்கள் நனைத்த வாசம்…
உந்தன் உடலில் சில பகுதி அதிலே வீசும்…

பெண் : உந்தன் இறுதி மூச்சு முடிந்து…
கண்கள் மூடும் தருணமே…
உனது உருவம் காட்டுமே…
உன்னோட நினைவு நான்…

ஆண் : காற்றில் மிதக்கும் இசை போல்…
உந்தன் காதில் நுழைந்து கொள்வேன்…

பெண் : காட்டில் கிடைக்கும் இலை போல்…
என் கூந்தல் களைத்து செல்வாய்…

ஆண் : இந்த பூமி போதுமா…
பெண் : இந்த பூமி போதுமா…
ஆண் : இன்னும் வேறு வேண்டுமா…
பெண் : இன்னும் வேறு வேண்டுமா…

ஆண் : நீ பார்த்த பார்வைகள்…
பெண் : நீ பார்த்த பார்வைகள்…
ஆண் : அது காலவெளியில் காற்று போல…
கலக்குமே மிதக்குமே…


Notes : Naan Ini Kaatril Song Lyrics in Tamil. This Song from Yaakkai (2017). Song Lyrics penned by Pa. Vijay. நான் இனி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading