நான் ஏரிக்கரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & சுவர்ணலதாஇளையராஜாசின்னத்தாயி

Naan Erikarai Song Lyrics in Tamil


ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல…

ஆண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு…
தென்காத்து ஓடி வந்து…
தூதாக போக வேணும் அக்கரையில…

ஆண் : நான் உண்டான ஆசைகள…
உள்ளார பூட்டி வச்சி…
ஒத்தையில வாடுறேனே இக்கரையில…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து…
முன்னும் பின்னும் பார்த்திருந்து…
மாமனுக்கு காத்திருந்தேன் காணல…

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்…
சந்தை மூடி போன பின்னும்…
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல…

BGM

பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து…
முன்னும் பின்னும் பார்த்திருந்து…
மாமனுக்கு காத்திருந்தேன் காணல…

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்…
சந்தை மூடி போன பின்னும்…
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல…

பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு…
தென்காத்து ஓடி வந்து…
தூதாக‌ போக வேணும் அக்கரையில…

பெண் : நான் உண்டான ஆசைகள…
உள்ளார பூட்டி வச்சி…
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில…

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல…

BGM

ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரம்தான்…
தாழப் பறந்து வரும் மேகம்தான்…

ஆண் : உன்கிட்ட சேராதோ…
என் பாட்ட கூறாதோ…
ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ…

பெண் : உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே…
செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே…

ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது…
எந்நாளும் என் நேசம் தப்பாது…

பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து…
முன்னும் பின்னும் பார்த்திருந்து…
மாமனுக்கு காத்திருந்தேன் காணல…

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமின்னு தோணல…

BGM

பெண் : மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்…
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்…
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ…
அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ…

ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி…
கன்னிப் பெண்ணாய் மாறாதோ…
மையேந்தும் கண்ணை காட்டி…
மையல் தீர பேசாதோ…

பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சு…
உள்ளார ஏதேதோ ஆயாச்சு…

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்…
ஊரடங்கி போன பின்னும்…
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல…

பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு…
தென்காத்து ஓடி வந்து…
தூதாக‌ போக வேணும் அக்கரையில…

பெண் : நான் உண்டான ஆசைகள…
உள்ளார பூட்டி வச்சி…
திண்டாடி நிக்கிறேனே இக்கரையில…

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து…
எட்டுத் திசை பார்த்திருந்து…
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல…

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்…
சந்தை மூடி போன பின்னும்…
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல…


Notes : Naan Erikarai Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. நான் ஏரிக்கரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading