நாம் நடந்த தெருவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்து ஆலப் ராஜுஆலப் ராஜுநாட்படு தேறல்

Naam Nadandha Theruvil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி…
காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி…
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்…
காற்றில் அலையுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : இந்தத் தெருவில் காகம் கரைந்தால் இசைதான்…
இந்தத் தெருவில் புழுதி பறந்தால் மணம்தான்…
இந்தத் தெருவில் வேப்பங் கனியும் தேன்தான்…
இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம் நீதான்…

ஆண் : காதல் நடந்த வீதியிலே…
நடந்து பார்த்தல் கொடுமையே…
தேகம் தேடி ஆடை ஒன்று…
நடந்து போதல் நரகமே…

ஆண் : ஒருசொல்லும் பேசாமலே…
ஊமைக் காதல் முடிந்ததடி…
நம் இதயங்களின் உரையாடலைத்தான்…
இந்தத் தெருவே பேசுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…

—BGM—

ஆண் : சாயம்போன பூக்கள் பூக்கும் மரங்கள்…
நம் கன்னம் போலக் காரை பெயர்ந்த சுவர்கள்…
திண்ணை எல்லாம் ஓடிப்போன குடில்கள்…
உன்னை என்னைத் தேடிப் பார்க்கும் தடங்கள்…

ஆண் : வீதியிருந்தும் வெறுமையாய்…
நாதியிருந்தும் தனிமையாய்…
இலக்கணத்தில் மட்டும் அல்ல…
வாழ்க்கையிலும் ஒருமையாய்…

ஆண் : ஒருசொல்லும் பேசாமலே…
ஊமைக் காதல் முடிந்ததடி…
நம் இதயங்களின் உரையாடலைத்தான்…
இந்தத் தெருவே பேசுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி…
காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி…
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்…
காற்றில் அலையுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
ம்ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—


Notes : Naam Nadandha Theruvil Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. நாம் நடந்த தெருவில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading