நாளை முதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Naalai Muthal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…

—BGM—

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்…
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ… ஓஓ…

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…

—BGM—

பெண் : விரல்களில் நானே…
கண்ணா உன் வேங்குழல்தானே…
விரல்களில் நானே…
கண்ணா உன் வேங்குழல்தானே…

பெண் : இசை மழையாய் பொழிவதற்கும்…
திசைகளெல்லாம் புகழ்வதற்கும்…
நீதானே காரணம்…

பெண் : வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்…

—BGM—

பெண் : வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்…
வேரை பறிப்பதழகோ…

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்…
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ… ஓஓ…

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே… ஓ…
ஆஅஆஆ… என் கண்ணனே…

—BGM—

பெண் : மழை தரும் மேகம்…
நீங்காமல் மறைக்கின்ற நேரம்…
மழை தரும் மேகம்…
நீங்காமல் மறைக்கின்ற நேரம்…

பெண் : நிலவு முகம் சிரிப்பதில்லை…
நினைவுகளும் இனிப்பதில்லை…
அறியாயோ கண்ணனே…

பெண் : உனக்கிதில் சந்தோஷம் தேவையோ…

—BGM—

பெண் : உனக்கிதில் சந்தோஷம் தேவையோ…
உள்ளம் உருகவில்லையோ…

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…

—BGM—


Notes : Naalai Muthal Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. நாளை முதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading