முத்தமிழே முத்தமிழே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாராமன் அப்துல்லா

Muthamile Muthamile Song Lyrics in Tamil


BGM

ஆண் : முத்தமிழே முத்தமிழே…
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…
முத்தத் தமிழ் வித்தகியே…
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன…

ஆண் : இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன…
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன…
மனம் வேகுது மோகத்திலே…
நோகுது தாபத்திலே…

ஆண் : முத்தமிழே முத்தமிழே…
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…
முத்தத் தமிழ் வித்தகியே…
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன…

BGM

பெண் : காதல் வழிச் சாலையிலே…
வேகத்தடை ஏதுமில்லை…

ஆண் : நாணக் குடை நீ பிடித்தும்…
வேர் வரைக்கும் சாரல் மழை…

பெண் : தாகம் வந்து பாய் விரிக்க…
தாவணிப்பூ சிலிர்க்கிறதே…

ஆண் : மோகம் வந்து உயிர் குடிக்க…
கை வளையல் சிரிக்கிறதே…

பெண் : உந்தன் பேரை சொல்லித்தான்…
காமன் என்னை சந்தித்தான்…

ஆண் : முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம்தான்…

பெண் : முத்தமிழே முத்தமிழே…
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…
முத்தத் தமிழ் வித்தகரே…
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன…

பெண் : இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன…
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன…
மனம் வேகுது மோகத்திலே…
நோகுது தாபத்திலே…

BGM

ஆண் : கனவு வந்து காத்திருக்கு…
தூங்கி கொள்ள மடி இருக்கா…

பெண் : ஆசை இங்கு பசித்திருக்கு…
இளமைக்கென்ன விருந்திருக்கா…

ஆண் : பூவைக் கிள்ளும் பாவனையில்…
சூடிகொள்ளத் தூண்டுகிறாய்…

பெண் : மச்சம் தொடும் தோரணையில்…
முத்தம் பெறத் தீண்டுகிறாய்…

ஆண் : மின்னல் சிந்திச் சிரித்தாய்…
கண்ணில் என்னைக் குடித்தாய்…

பெண் : தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்…

ஆண் : ஆஹா… முத்தமிழே…
பெண் : ம்ம்ம்ம்…
ஆண் : முத்தமிழே…
பெண் : என்ன…

ஆண் : முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…
பெண் : முத்தத் தமிழ் வித்தகரே…
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன…

ஆண் : இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன…
பெண் : உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன…

ஆண் : மனம் வேகுது மோகத்திலே…
நோகுது தாபத்திலே…

பெண் : முத்தமிழே முத்தமிழே…
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…

ஆண் : முத்தத் தமிழ் வித்தகியே…
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன…


Notes : Muthamile Muthamile Song Lyrics in Tamil. This Song from Raman Abdullah (1997). Song Lyrics penned by Arivumathi. முத்தமிழே முத்தமிழே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading