ஆராரோ ஆரிரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிகரன் & முத்து வீராஅமலிமுரளி கிருஷ்ணன்வென்று வருவான்

Aaraaro Aaraaro Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

பெண் : கண்ணுமில்லை மண்ணுமில்லை…
கருவிலை சுமந்தேன் உன்னை…
உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன்…
கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன்…
என் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன்…

பெண் : உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான்…
என் மகனே…
உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான்…

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

BGM

பெண் : கருவறை கடந்தவனே…
சிறையறை போகையிலே…
நான் சிந்திய கண்ணீரு…
கடல் நீரா போனதடா…
கடல் நீரா போனதடா…

பெண் : சிலையாட்டம் என் புள்ளை…
சிறைப்படும் சேதி கேட்டு…
சாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே…

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

பெண் : என் மகனே…
சாமிக்கும் கண்ணில்லையா…

BGM

பெண் : வயித்தில சொமந்த புள்ள…
கயித்தில தொங்கும் முன்னே…
தாலாட்டு பாடிடவா நான் வந்தேன்…
தாலாட்டு பாடிடவா நான் வந்தேன்…

பெண் : ஒத்த மகனா பொறந்ததால…
உனக்கிந்த நிலைமையடா…
ஊரு சனம் கலங்குதடா…
ஊரு சனம் கலங்குதடா…

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

BGM

பெண் : ஊருக்கே பாடியிருக்கேன்…
யார் யாருக்கோ பாடியிருக்கேன்…
உனக்கு பாடயில…
நான் பாடயில போகலையே…
என் உசிரு போகலையே… மகனே…

பெண் : இந்த குருட்டு பாவி வாழ்கை…
இருட்டா போனதடா…
ஈர கொலை நடுங்குதடா…
பெத்த வயிறு எரியுதடா…
பெத்த வயிறு எரியுது…
அது பத்தித்தான் எரியுதடா…

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

பெண் : கண்ணான கண்மணியே…
கண் மூடும் வேளையிலே…
கல்லறையில் நானிருப்பேன்…
நீ ஆறடியில் ஏறும் முன்னே…
உன் காலடியில் நான் இருப்பேன்…


Notes : Aaraaro Aaraaro Song Lyrics in Tamil. This Song from Vendru Varuvaan (2016). Song Lyrics penned by Nigaran & Muthu Veera. ஆராரோ ஆரிரோ பாடல் வரிகள்.


Scroll to Top