மீனம்மா மீனம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாராஜாதி ராஜா

Meenamma Meenamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ…
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ… ஓஓ…

பெண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து…
ராஜ நடை போடுதே…
தங்க மகன் தேரில் வந்தால்…
கோடி மின்னல் சூழுதே…

ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு…
வித்தை செய்யும் பூங்கொடி…
தத்தி தத்தி தாவி வந்து…
கையில் என்னை ஏந்தடி…

பெண் : மோகம் கொண்ட மன்மதனும்…
பூக்கணைகள் போடவே…
காயம் பட்ட காளை நெஞ்சும்…
காமன் கணை மூடுதே…

ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும்…
இந்திரனின் ஜாலமோ…
சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ…

பெண் : இதமாக சுகம் காண…
துணை நீயும் இங்கு வேண்டுமே…
சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…

ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
பெண் : ஆஹா… தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா…

BGM

ஆண் : இட்ட அடி நோகுமம்மா…
பூவை அள்ளி தூவுங்கள்…
மொட்டு உடல் வாடுமம்மா…
பட்டு மெத்தை போடுங்கள்…

பெண் : சங்கத்தமிழ் காளை இவன்…
பிள்ளை தமிழ் பேசுங்கள்…
சந்தனத்தை தான் துடைத்து…
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்…

ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி…
லாலி லல்லி கூறுங்கள்…
நெஞ்சமென்னும் மஞ்சமதில்…
நான் இணைய வாழ்த்துங்கள்…

பெண் : பள்ளியறை நேரமிது…
தள்ளி நின்று பாடுங்கள்…
சொல்லி தர தேவை இல்லை…
பூங்கதவை மூடுங்கள்…

ஆண் : சுகமான புது ராகம்…
உருவாகும் வேலை நாணமோ…

பெண் : இதமாக சுகம் காண…
துணை வேண்டாமோ… ஓஹோ…

ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…

பெண் : சுகமான புது ராகம்…
உருவாகும் வேளை நாணுமே…
இதமாக சுகம் காண…
துணை வேண்டாமோ… ஓஓ…

ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
பெண் : தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா…


Notes : Meenamma Meenamma Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Piraisoodan. மீனம்மா மீனம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading