மெதக்கவிட்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சஞ்சனா கல்மஞ்சே & எஸ்.எஸ். தமன்எஸ்.எஸ். தமன்இவன் தந்திரன்

Medhakkavitta Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என்ன மெதக்கவிட்ட மெதக்கவிட்ட…
காத்து குயிலானேன்…
உன் நட்புக்குள்ள வானம் கட்டி…
கூட்டு குயில் ஆனேன்…

பெண் : என்ன மெதக்கவிட்ட மெதக்கவிட்ட…
பாட்டு குழலானேன்…
ஒரு ஊரே கேட்கும் பேச்சுக்காரி…
கீச்சுக் குரலானேன்…

பெண் : உன்ன பொல்லாத தீயென பாத்தேன்…
என்ன அன்பால நீ தொட தோத்தேன்…
நேத்து இல்லாதது இப்ப என்னோடது…
என் உலகம் புதுசாச்சு…

பெண் : என்ன அஞ்சாறு கடல் அடிச்சாலும்…
நான் தள்ளாடி அசைஞ்சிட மாட்டேன்…
நீ யாருக்குனோ விட்ட கண்ணீர் துளி…
என்ன அடிச்சி போயாச்சு…

ஆண் : சின்ன கண்ணாடி பொண்ணாக நிக்காதடி…
கண்ணு முன்னாடி துப்பாக்கி வெக்காதடி…
ஹார்மோனில் ஆன் பட்டன் தட்டாதடி…
காதல் அம்புக்கு வீண் வேல வெக்காதடி…

ஆண் : சொல்லாம நீ நொழஞ்சி ஒட்டாதடி…
என் மௌனத்தில் நீ குதிச்சி கத்தாதடி…
வத்தாத சிரிப்புல எத்தாதடி…
நம்ம நட்போடு முடிப்பது பத்தாதடி…

ஆண் : சும்மாவே சுத்தி வந்த என்னோட புத்திக்குள்ள…
ஐந்நூறு டன் ஆச கொட்டாதடி…
நெஞ்சோட ஆழத்துக்கு நீ போய் சேரனும்னு…
உள் நீச்சல் போடாதடி…

ஆண் : என்ன மெதக்கவிட்ட மெதக்கவிட்ட…
காத்து குயிலானேன்…
உன் காதல் பட்ட காதுக்குள்ள…
மாட்டி துகளானேன்…

ஆண் : என்ன மெதக்கவிட்ட மெதக்கவிட்ட…
பாட்டு குழலானேன்…
நீ ஓர கண்ணில் சோலி சுத்த…
காட்டு சுழலானேன்…

—BGM—

ஆண் : ராத்திரியில் உன் திசை பாத்துதான் தூங்குறேன்…
மூச்சு விடும் சாக்கில் உன் வாசன வாங்குறேன்…
சாய்ச்சுகிட்டு வெண்ணிலா காட்டதான் ஏங்குறேன்…
காதல் குட்டி கிறுக்கனா ஆக்குதே தாங்குறேன்…

பெண் : எங்கும் இல்லாத வேதியலாக…
ஈர மண்ணோட தீப்பிடிச்சாச்சு…
என் கில்லாடி நண்பன உள்ளார ஏத்தியும்…
இதயம் லேசாச்சு…

ஆண் : சின்ன கண்ணாடி பொண்ணாக நிக்காதடி…
கண்ணு முன்னாடி துப்பாக்கி வெக்காதடி…
ஹார்மோனில் ஆன் பட்டன் தட்டாதடி…
காதல் அம்புக்கு வீண் வேல வெக்காதடி…

ஆண் : சொல்லாம நீ நொழஞ்சி ஒட்டாதடி…
என் மௌனத்தில் நீ குதிச்சி கத்தாதடி…
வத்தாத சிரிப்புல எத்தாதடி…
நம்ம நட்போடு முடிப்பது பத்தாதடி…

ஆண் : சும்மாவே சுத்தி வந்த என்னோட புத்திக்குள்ள…
ஐந்நூறு டன் ஆச கொட்டாதடி…
நெஞ்சோட ஆழத்துக்கு நீ போய் சேரனும்னு…
உள் நீச்சல் போடாதடி…

ஆண் : என்ன மெதக்கவிட்ட மெதக்கவிட்ட…
காத்து குயிலானேன்…
உன் காதல் பட்ட காதுக்குள்ள…
மாட்டி துகளானேன்…

ஆண் : என்ன மெதக்கவிட்ட மெதக்க விட்ட…
பாட்டு குழலானேன்…
நீ ஓர கண்ணில் சோலி சுத்த…
காட்டு சுழலானேன்…

—BGM—


Notes : Medhakkavitta Song Lyrics in Tamil. This Song from Ivan Thanthiran (2017). Song Lyrics penned by Vivek. மெதக்கவிட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading