மழை மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Mazhai Mazhai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…

ஆண் : அலை அலை என தாக்குதே…
மழை தாக்குதே மழை தாக்குதே…
நினை நினை என கேட்குதே…
மனம் கேட்குதே அய்யோ…

ஆண் : அனை அனை என கெஞ்சுதே…
உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே…
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே…
உனை கொஞ்சுதே அய்யோ…

—BGM—

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

—BGM—

ஆண் : முத்தம் கேட்டால்…
பெண் : வெட்கம் தருவேன்…
ஆண் : வெட்கம் கேட்டால்…
பெண் : வண்ணம் தருவேன்…

ஆண் : காத்து கிடந்தால்…
பெண் : மெல்ல வருவேன்…
ஆண் : தூக்கம் கெடுத்து…
பெண் : தொல்லை தருவேன்…

ஆண் : கனவில் தொட்டால்…
பெண் : தள்ளி விடுவேன்…
ஆண் : நேரில் தொட்டால்…
பெண் : கிள்ளி விடுவேன்…
ஆண் : நீ அடங்காத என் ராட்சசி…

—BGM—

ஆண் : பொய்கள் சொன்னால்…
பெண் : வாடிவிடுவேன்…
ஆண் : மீண்டும் சொன்னால்…
பெண் : ஓடிவிடுவேன்…

ஆண் : மழையில் வந்தால்…
பெண் : குடைகள் தருவேன்…
ஆண் : மடியில் வந்தால்…
பெண் : உதைகள் தருவேன்…

ஆண் : கெஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்ச வருவேன்…
ஆண் : கொஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்சம் தருவேன்…
ஆண் : நீ என்னை கொல்லும் வன தேவதை…

ஆண் : நீ உன் பாதியை…
என் பார்வையில் தேடினாய்…
நான் என் மீதியை…
கண்டேன் என கூவினேன்…

ஆண் & பெண் : நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே…
காதல் பூக்கள் வானும் மண்ணும்…
தீயும் நீரும் நீயும் நானும் காதலாகி மேவியாட…

—BGM—

ஆண் : காதல் என்றால்…
பெண் : செல்ல பார்வை…
ஆண் : ஆசை என்றால்…
பெண் : கள்ள பார்வை…

ஆண் : ஊடல் என்றால்…
பெண் : கொஞ்சம் கோபம்…
ஆண் : கோபம் என்றால்…
பெண் : மீண்டும் ஊடல்…

ஆண் : தேடல் என்றால்…
பெண் : உன்னுள் என்னை…
ஆண் : தேடி வந்தால்…
பெண் : தொலையும் பெண்மை…
ஆண் : நான் தொலைந்தாலும் சுகம் தானடி…

—BGM—

ஆண் : தயக்கம் என்றால்…
பெண் : இதழின் நடனம்…
ஆண் : மயக்கம் என்றால்…
பெண் : மனதின் நடனம்…

ஆண் : கிரக்கம் என்றால்…
பெண் : கண்ணின் நடனம்…
ஆண் : கலக்கம் என்றால்…
பெண் : நரம்பின் நடனம்…

ஆண் : விருப்பம் என்றால்…
பெண் : விழியின் நடனம்…
ஆண் : நெருக்கம் என்றால்…
பெண் : விரலின் நடனம்…
ஆண் : இனி நெருங்காமல் நெருப்பில்லையே…

ஆண் : நீ எனக்காகவே உருவானவள் ஸ்நேகிதி…
என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி…

ஆண் & பெண் : நேற்றை கொன்று இன்றை வென்று…
நாளை செய்தாய் உன்னை தெட்டு என்னை தெட்டு…
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று…

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…


Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. மழை மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading