மயிலாடும் தோப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராணியே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ…

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு…
வைக்கின்ற முத்தம் எல்லாம்…
கல்வெட்டு போலே நிற்கும்…
கண்ணே நம் காலம் எல்லாம்…

பெண் : நேசித்து நெஞ்சில் வைத்து நீண்ட காலம்…
யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்…

ஆண் : யோசித்து ஒவ்வொன்றாக காதல் பாடம்…
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்…

பெண் : மை விழியோரம் ஐவகை பாணம்…
ஆண் : மன்மதன் போடும் மங்கல நேரம்…
பெண் : பொன் மாலைப் பொழுதினிலே…

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
பெண் : மானானது யாரோ மகராஜனே நீயோ…

BGM

பெண் : உள்ளத்தின் உண்டியலில்…
உன் ஆசை எண்ணங்களை…
சேமித்து வைத்த கன்னி…
சிந்தித்தாள் உன்னை எண்ணி…

ஆண் : சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க…
சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க…

பெண் : பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம்…
போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்…

ஆண் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட…
பெண் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட…
ஆண் : சங்கீத மயக்கத்திலே… ஏ…

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராஜனே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ…

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…


Notes : Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Vaali. மயிலாடும் தோப்பில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading