| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேக் | மகாலிங்கம் & பூஜா வைத்யநாத் | ராம் ஜீவன் | ரங்கா (2022) |
Mathapoo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மத்தாப்பூ மாலை கட்டி…
மேளதாளம் கண்ணனாம்…
காத்தாகும் காள வண்டி…
ஊரே பாக்க ஊர்கோலம்…
ஆண் : வாயார வந்த மக்க…
வாழ்த்தி போகும் கோலாலம்…
ஈரெட்டு செல்வன் சேர…
வாழு வேணும் எந்நாளும்…
குழு : ஏலேலம் ஏலேலம் போட்டுக்க ஏலேலம்…
கோலாலம் கோலாலம் கும்மாளம் கோலாலம்…
ஏலேலம் ஏலேலம் போட்டுக்க ஏலேலம்…
கோலாலம் கோலாலம் கும்மாளம் கோலாலம்…
பெண் : நீ கட்டும் தாலி அள்ளி…
மாரோட ஒட்டிப்பா…
உன் ஆசை மட்டும் அள்ளி…
மூச்சாகி பொத்திப்பா…
பெண் : கல்கண்டு பேச்சுக்காரி…
காதோரம் தித்திப்பா…
கட்டிக்க கிட்ட வந்தா…
தானாவே சிக்கிப்பா…
ஆண் : ஓ… ராசா வந்துட்டான்…
பெண் : ஓ… ராணி வந்துட்டா…
குழு : ஓ… ராசா வந்துட்டான்…
ஓ… ராணி வந்துட்டா…
ஆண் : மத்தாப்பூ மாலை கட்டி…
மேளதாளம் கண்ணனாம்…
காத்தாகும் காள வண்டி…
ஊரே பாக்க ஊர்கோலம்…
—BGM—
ஆண் : கண்ணால கொஞ்சிப்பான்…
பின்னால கட்டிப்பான்…
அவன் மீசை முத்தம் வச்சு…
உருக வைப்பான்…
பெண் : இரவில் காக்க வைப்பான்…
ஆண் : விடிஞ்சா பூக்க வைப்பான்…
பெண் : காணாத கனவையும் தீப்பான்…
வேணுமுன்னே அவ கிட்ட தோப்பான்…
குழு : தன்ன நம்பி வந்த பொண்ணுக்குதான்…
துணை இருப்பான்…
பெண் : அந்த ரங்கநாதன் போல இவன்…
காத்து நிப்பான்…
ஆண் : மத்தாப்பூ மாலை கட்டி…
மேளதாளம் கண்ணனாம்…
காத்தாகும் காள வண்டி…
ஊரே பாக்க ஊர்கோலம்…
—BGM—
பெண் : ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை…
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை…
குழு : ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட…
ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட…
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்…
குழு : மாலை சாற்றினால்…
கோதை மாலை மாற்றினால்…
பூ மாலை சாற்றினால்…
கோதை மாலை மாற்றினால்…
—BGM—
பெண் : காதல்னா கிள்ளிப்பான்…
காய்ச்சல்னா அள்ளிபான்…
போர்வைக்குள் அன்ப கொட்டி உறவாக்கிப்பான்…
ஆண் : கொழந்தை போல் இருப்பா…
பெண் : குதிச்சா வாலறுப்பா…
ஆண் : பாம்பாட்டம் சீறி சண்டை சேப்பா…
பள்ளிக்கே அஞ்சி கைய கோப்பா…
பெண் : உன் சட்டை அள்ளி கையில் வச்சு…
உறங்கிருப்பா…
குழு : அதில் காலம் பூரா…
நீ இருக்க வணங்கிருப்பா…
ஆண் : மத்தாப்பூ மாலை கட்டி…
மேளதாளம் கண்ணனாம்…
காத்தாகும் காள வண்டி…
ஊரே பாக்க ஊர்கோலம்…
—BGM—
Notes : Mathapoo Song Lyrics in Tamil. This Song from Ranga (2022). Song Lyrics penned by Vivek. மத்தாப்பூ பாடல் வரிகள்.
