மருதாணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமதுஸ்ரீ & ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்சக்கரகட்டி

Marudaani Song Lyrics in Tamil


BGM

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கு… கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அவன் இதய வீட்டில் வாழும்…
அவள் தேகம் வெந்து போகும்…
என அவன் அருந்திட மாட்டான்…
சுடு நீரும் சுடு சோறும்…

பெண் : காதலி கை நகம் எல்லாம்…
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்…

BGM

பெண் : ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி… ஓஓ…
உணரவில்லை இன்னொரு பாதி…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

BGM

பெண் : அவள் அவன் காதல் நெஞ்சில்…
கண்டாலே சிறு குற்றம்…
அவன் நெஞ்சம் தாய்பால் போலே…
எந்நாளும் பரிசுத்தம்…
ஆத்திரம் நேத்திரம் மூட… அஅ…
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்…

BGM

பெண் : ஆக மொத்தம் அவசரக் கோலம்… ஓ… ஓஓ…
அவளுக்கிதை காட்டிடும் காலம்…

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி… மருதாணி விழியில் ஏன்…
மருதாணி… மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…


Notes : Marudaani Song Lyrics in Tamil. This Song from Sakkarakatti (2007). Song Lyrics penned by Vaali. மருதாணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading