மறைந்திருந்து பார்க்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்தில்லானா மோகனாம்பாள்

Marainthirunthu Parkum Song Lyrics in Tamil


BGM

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன… ஸ்வாமி…
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

பெண் : அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

பெண் : அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நவரசமும்…

BGM

பெண் : முகத்தில் நவரசமும்…
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்…
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்…
கண்டு…

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

BGM

பெண் : எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்…
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பாவையின் பதம் காண நாணமா…
பாவையின் பதம் காண நாணமா…
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…

பெண் : மாலவா… வேலவா… மாயவா…
ஷண்முகா…

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

BGM

பெண் : நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்…
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்…
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்…
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்…

பெண் : மோகத்திலே என்னை மூழ்க வைத்து…
மோகத்திலே என்னை மூழ்க வைத்து…
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்…
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்…

பெண் : மாலவா… வேலவா… மாயவா…
ஷண்முகா…

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மானாட மலராட மதி ஆட நதி ஆட…
மங்கை இவள் நடனமாட…
வானாட மண்ணாட கொடி ஆட இடை ஆட…
வஞ்சி இவள் கைகள் ஆட…

பெண் : சுவையோடு நானாட…
என்னை நாடி இதுவேளை இரவினில்…
துணையாக ஓடி வருவாய்…

பெண் : தூயனே மாலவா மாயனே வேலவா…
என்னை ஆளும் ஷண்முகா வா…

பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

பெண் : அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…

BGM


Notes : Marainthirunthu Parkum Song Lyrics in Tamil. This Song from Thillana Mohanambal (1968). Song Lyrics penned by Kannadasan. மறைந்திருந்து பார்க்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading