மண்ணிலே ஈரமுண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவைக்கம் விஜயலட்சுமிசீன் ரோல்டன்ஜெய் பீம்

Manniley Eeramundu Song Lyrics in Tamil


BGM

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…

பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு…
எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…

BGM

பெண் : உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்…
எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும்…
உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்…
அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம்…

பெண் : தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா…
எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா…

BGM

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…

பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு…
எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…

பெண் : மண்ணிலே ஈரம் உண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…


Notes : Manniley Eeramundu Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. மண்ணிலே ஈரமுண்டு பாடல் வரிகள்.


Scroll to Top