மண்ணிலே மண்ணிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பி. சரண் & சுமங்கலிதேவி ஸ்ரீ பிரசாத்மழை

Mannile Mannile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…

பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…

ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

—BGM—

ஆண் : பூ சிதறிடும் மேகம்…
பொன் வானவில் வரைகிறதோ…
ஏழ் நிறங்களினால்…
நமக்கொரு மாலை செய்கிறதோ…

பெண் : வான் தாரகை எல்லாம்…
நீர் பூக்களின் தோரணமோ…
வான் தேவதைகள்…
ஆசிகள் கூறும் அச்சதையோ…

ஆண் : இத்தனை மழையிலும்…
இந்த நாணம் கரையவில்லை…

பெண் : கன்னி நான் நனையலாம்…
கற்பு நனைவதில்லை…

ஆண் : அடி மனிதனை விடவும்…
மழை துளி உயர்ந்தது…
இது வரை புரியவில்லை…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

—BGM—

பெண் : நான் காதலை சொல்ல…
என் வாய் மொழி துணை இல்லையே…
தன் வார்த்தைகளால் மழை துளி…
என் மனம் சொல்லியதே…

ஆண் : முன் கோபுர அழகை…
உன் தாவணி மூடியதே…
உன் ரகசியத்தை…
மழை துளி அம்பலம் ஆக்கியதே…

பெண் : மழை விழும் பொழுதெல்லாம்…
என்னை வந்து சேர்வாயா…

ஆண் : காதலை சேர்ப்பதே…
மழையின் வேலையா…

பெண் : அட மலர்களில் மழை விழும்…
வேர்களில் வெயில் விழும்…
அதிசயம் அறிவாயா…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…

—BGM—

ஆண் : மண்ணிலே மண்ணிலே…
வந்து உடையுது வானம்…

பெண் : மழையிலே கரையுதே…
ரெண்டு மனங்களின் தூரம்…

ஆண் : காதில் கேட்கும் இடி ஓசை…
காதல் நெஞ்சின் பரிபாஷை…

பெண் : மழையை போலே உறவாட…
மனதில் என்ன பேராசை…

ஆண் : நீரில் எழுதும் காதல் அழியும்…
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே…

ஆண் : ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா…
ஓ… ஷைலு ஷைலு…
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா… ஷைலு…


Notes : Mannile Mannile Song Lyrics in Tamil. This Song from Mazhai (2005). Song Lyrics penned by Vairamuthu. மண்ணிலே மண்ணிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading