| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | பாசமலர் |
Malarnthum Malaraatha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மலர்ந்து மலராத பாதி மலர் போல…
வளரும் விழி வண்ணமே…
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக…
விளைந்த கலை அன்னமே…
பெண் : நதியில் விளையாடி…
கொடியில் தலை சீவி…
நடந்த இளம் தென்றலே…
பெண் : வளர் பொதிகை மலை தோன்றி…
மதுரை நகர் கண்டு…
பொலிந்த தமிழ் மன்றமே…
—BGM—
ஆண் : மலர்ந்து மலராத பாதி மலர் போல…
வளரும் விழி வண்ணமே…
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக…
விளைந்த கலை அன்னமே…
ஆண் : நதியில் விளையாடி…
கொடியில் தலை சீவி…
நடந்த இளம் தென்றலே…
ஆண் : வளர் பொதிகை மலை தோன்றி…
மதுரை நகர் கண்டு…
பொலிந்த தமிழ் மன்றமே…
—BGM—
ஆண் : யானை படை கொண்டு…
சேனை பல வென்று…
ஆளப் பிறந்தாயடா…
புவி ஆளப் பிறந்தாயடா…
ஆண் : அத்தை மகளை மணம் கொண்டு…
இளமை வழி கண்டு…
வாழப் பிறந்தாயடா…
வாழப் பிறந்தாயடா…
ஆண் : அத்தை மகளை மணம் கொண்டு…
இளமை வழி கண்டு…
அத்தை மகளை மணம் கொண்டு…
இளமை வழி கண்டு…
வாழப் பிறந்தாயடா…
—BGM—
பெண் : தங்கக் கடியாரம்…
வைர மணியாரம்…
தந்து மணம் பேசுவார்…
பொருள் தந்து மணம் பேசுவார்…
பெண் : மாமன் தங்கை மகளான…
மங்கை உனக்காக…
உலகை விலை பேசுவார்…
உலகை விலை பேசுவார்…
பெண் : மாமன் தங்கை மகளான…
மங்கை உனக்காக…
மாமன் தங்கை மகளான…
மங்கை உனக்காக…
உலகை விலை பேசுவார்…
—BGM—
ஆண் : நதியில் விளையாடி…
கொடியில் தலை சீவி…
நடந்த இளம் தென்றலே…
ஆண் : வளர் பொதிகை மலை தோன்றி…
மதுரை நகர் கண்டு…
பொலிந்த தமிழ் மன்றமே…
—BGM—
பெண் : சிறகில் எனை மூடி…
அருமை மகள் போல…
வளர்த்த கதை சொல்லவா…
பெண் : கனவில் நினையாத…
காலம் இடை வந்து…
பிரித்த கதை சொல்லவா…
பிரித்த கதை சொல்லவா…
ஆண் : கண்ணில் மணி போல…
மணியின் நிழல் போல…
கலந்து பிறந்தோமடா…
ஆண் : இந்த மண்ணும் கடல் வானும்…
மறைந்து முடிந்தாலும்…
மறக்க முடியாதடா…
உறவை பிரிக்க முடியாதடா…
—BGM—
பெண் : அன்பே ஆரிராராரோ…
ஆரிராராரோ ஆரிராராரிரோ…
அன்பே ஆரிராராரிரோ…
அன்பே ஆரிராராரிரோ…
Notes : Malarnthum Malaraatha Song Lyrics in Tamil. This Song from Pasamalar (1961). Song Lyrics penned by Kannadasan. மலர்ந்து மலராத பாடல் வரிகள்.

