| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | மனோ | இளையராஜா | ராஜாதி ராஜா |
Malaiyaala Song Lyrics in Tamil
ஆண் : சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது…
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது…
வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள்…
மனம் விட்டு சிரிக்கின்றதே…
—BGM—
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
ஆண் : மலமுடியினில் பனி வடியுது வடியுது…
மண் மணக்குதம்மா…
காலை அழகினில் மனம் கரையுது கரையுது…
கண் மயங்குதம்மா…
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
—BGM—
ஆண் : ஹே… ஓஓ பம் பிம் பம் பம்…
நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள…
நீரோடை தாயை போல வாரி வாரி அல்ல…
ஆண் : நீல வானம் அதில் அத்தனை மேகம்…
நீர்கொண்டு காற்றிலேறி நீண்ட தூரம் போகும்…
ஆண் : காதோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச…
காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச…
ஆண் : தேக்கும் பாக்கும் கூடாதோ…
தோளை தொட்டு ஆடாதோ…
பார்க்க பார்க்க ஆனந்தம் போகப்போக வாராதோ…
ஆண் : என் மனம் துள்ளுது…
தன் வழி செல்லுது…
வண்ண வண்ண கோலம்…
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
ஆண் : மலமுடியினில் பனி வடியுது வடியுது…
மண் மணக்குதம்மா…
காலை அழகினில் மனம் கரையுது கரையுது…
கண் மயங்குதம்மா…
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
—BGM—
ஆண் : தூறல் உண்டு மலை சாரலும் உண்டு…
பொன்மாலை வெயில் கூட ஈரமாவதுண்டு…
தோட்டமுண்டு கிளி கூட்டமும் உண்டு…
கிள்ளைக்கும் நம்மை போல காதல் வாழ்க்கை உண்டு…
ஆண் : நான் அந்த கிள்ளை போல வாழ வேண்டும்…
வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்…
எண்ணம் என்னும் சிட்டுதான் ரெக்கை கட்டி கொள்ளாதா…
எட்டு திக்கும் தொட்டு தான் எட்டி பாய்ந்து செல்லாதா…
ஆண் : என் மனம் துள்ளுது…
தன் வழி செல்லுது…
வண்ண வண்ண கோலம்…
ஆண் : ஹே… மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
ஆண் : மலமுடியினில் பனி வடியுது வடியுது…
மண் மணக்குதம்மா…
காலை அழகினில் மனம் கரையுது கரையுது…
கண் மயங்குதம்மா…
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
Notes : Malaiyaala Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Vaali. மலையாள கரையோரம் பாடல் வரிகள்.


