எங்க ஊரு மெட்ராசு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஹரசுதன் & மீனாட்சி ஐயர்சந்தோஷ் நாராயணன்மெட்ராஸ்

Madras Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சென்னை வட சென்னை…
குழு : சென்னை வட சென்னை…
ஆண் : இந்த கறுப்பர் தமிழ் மண்ண…
குழு : கறுப்பர் தமிழ் மண்ண…

ஆண் : யாரோ இசைபாறோ…
குழு : சென்னை வட சென்னை…
ஆண் : எங்க வேர அசைபாறோ…
குழு : வேர அசைபாறோ…

ஆண் : எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…

—BGM—

குழு : சென்னை வட சென்னை…
கறுப்பர் தமிழ் மண்ண…

—BGM—

ஆண் : முள்ளு தச்ச கூட்டுகுள்ள…
காககுஞ்சா வாழ்ந்த கூட…
பள்ளிகூட புள்ள போல துள்ளி குதிப்போம்…

ஆண் : மொட்டைமாடி மேல நாங்க…
தொட்டி செடி போல இல்ல…
கூட்டமாக கூடி வாழும் காட்டு மரம்தான்…

ஆண் : ரிப்பன் பில்டிங் ஹை கோர்ட் எல்லாம்…
செங்கல் மணல் மட்டும் அல்ல…
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்குடா…

ஆண் : கட்டுப்பாடு போட்டு நீங்க…
எங்கள தான் கட்டி வச்சா…
சட்டிமேளம் போல நாங்க சத்தம் போடுவோம்…

ஆண் : கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்…
அட இருக்கும் இடத்தில இருந்து பறவையா பறப்போம்…

குழு : கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்…
அட இருக்கும் இடத்தில இருந்து பறவையா பறப்போம்…

ஆண் : எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…

—BGM—

ஆண் : கமருகட்டு கண்ணு காரி…
திமிரிக்கிட்டு போகும் போது…
அமரன்கிட்ட சொன்ன காதல் கொண்டாட்டம்தான்…

ஆண் : கால் பந்து குத்து சண்ட…
கேரம் போர்டு கபடி எல்லாம்…
எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டுதான்…

ஆண் : பேண்ட்டு சத்தம் டேப்பு சத்தம்…
கான பாட்டு காத சுத்தும்…
ஆகா மொத்தம் வாழுவோமே இசையோடுதான்…

ஆண் : போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு…
கூட்டம் கூடி வோட்டு போட்டு…
ஏமாற்றமே எங்க பண்பாடுதான்…

ஆண் : உழைக்கும் எனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்…
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்…

குழு : உழைக்கும் எனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்…
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்…

ஆண் : சென்னை வட சென்னை…
குழு : சென்னை வட சென்னை…
ஆண் : இந்த கறுப்பர் தமிழ் மண்ண…
குழு : கறுப்பர் தமிழ் மண்ண…

ஆண் : யாரோ இசைபாறோ…
குழு : சென்னை வட சென்னை…
ஆண் : எங்க வேர அசைபாறோ…
குழு : வேர அசைபாறோ…

—BGM—

{ ஆண் : எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்க தானே அட்ரசு…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு… } * (2)

—BGM—

{ ஆண் : எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்க தானே அட்ரசு…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு… } * (2)

ஆண் : எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு… ஹோய்…


Notes : Madras Song Lyrics in Tamil. This Song from Madras (2014). Song Lyrics penned by Kabilan. எங்க ஊரு மெட்ராசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading