மாமா உன் பொண்ண கொடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாராஜாதி ராஜா

Maama Un Ponna Song Lyrics in Tamil


ஆண் : மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…

—BGM—

ஆண் : மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…
அட மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…

ஆண் : இது சாமி போட்ட முடிச்சு…
அது தான்டா மூனு முடிச்சு…

குழு : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

ஆண் : தாலி கட்டவும் மேளம் கொட்டவும்…
நேரம் வந்துடுச்சு…
ஊரு உலகம் சேர்ந்து…
எனக்கு மாலை தந்துடுச்சு…

ஆண் : அட மாமா…
குழு : உன் பொண்ண கொடு…
ஆண் : ஆமா…
குழு : சொல்லிபுடு…

—BGM—

ஆண் : ஊருக்குள்ள என்ன பத்தி…
குழு : கேட்டுக்குங்க நல்ல புள்ள…
ஆண் : உத்தமனா வாழ்ந்து வந்தேன்…
குழு : தப்பு தண்டா ஏதும் இல்ல…

ஆண் : அட மாப்பிள்ளை நான் யோக்கியன்தான்…
குழு : நீங்க செஞ்ச பாக்கியம்தான்…
ஆண் : மாப்பிள்ளை நான் யோக்கியன்தான்…
குழு : நீங்க செஞ்ச பாக்கியம்தான்…

ஆண் : யாருக்கும் தெரியாம…
நான் தாலிய கட்டவும் மாட்டேன்…
நியாயத்த மறக்காம…
அட நானும் உன்கிட்ட கேட்டேன்…

ஆண் : என்னோட ஆசை உன் பொண்ணோட பேச…
என் மாமா நீ சொன்னா கேளு ஹே…

ஆண் : மாமா…
குழு : உன் பொண்ண கொடு…
ஆண் : அட ஆமா…
குழு : சொல்லிபுடு…

ஆண் : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

குழு : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

ஆண் : தாலி கட்டவும் மேளம் கொட்டவும்…
நேரம் வந்துடுச்சு…
ஊரு உலகம் சேர்ந்து…
எனக்கு மாலை தந்துடுச்சே… ஹேய் ஹேய்…

—BGM—

ஆண் : பண்ணபுரம் போனதில்ல…
குழு : பாஞ்சாலிய பாத்ததில்ல…
ஆண் : ஆமா காஞ்சிபுரம் போனதில்ல…
குழு : காமாட்சிய கண்டதில்ல…

ஆண் : அட பட்டணம்தான் போனதில்ல…
குழு : பத்தினிய பாத்ததில்ல…
ஆண் : அட பட்டணம்தான் போனதில்ல…
குழு : பத்தினிய பாத்ததில்ல…

ஆண் : ஆயிரம் இருந்தாலும் உன் மகள போல வருமா…
மணக்குது தெரு எல்லாம் அட வாழை பூவு குருமா…
பொண்ணோட நானும் ஆஹா ஒன்னாக வேணும்…
என் மாமாவே என்ன வேணும்…

ஆண் : மாமோய்…
குழு : உன் பொண்ண கொடு…
ஆண் : அட ஆமா…
குழு : சொல்லிபுடு…

ஆண் : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

குழு : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

ஆண் : ஓய்… தாலி கட்டவும் மேளம் கொட்டவும்…
நேரம் வந்துடுச்சு…
ஊரு உலகம் சேர்ந்து…
எனக்கு மாலை தந்துடுச்சே…

—BGM—


Notes : Maama Un Ponna Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாமா உன் பொண்ண கொடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading