குட்டி குட்டி பனித்துளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாமனதை திருடிவிட்டாய்

Kutti Kutti Pani Thuliye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : குட்டி குட்டி பனித்துளியே…
குளு குளு பனி துளியே…
முத்து முத்து பனி துளியே…
முத்தம் இடும் பனி துளியே…

பெண் : நீ எங்கிருந்து பிறந்தாய்…
நீ எங்க வந்து நிறைந்தாய்…
அந்த சூரியனை பார்த்ததுமே ஏன் குளிர்ந்தாய்…

பெண் : குட்டி குட்டி பனித்துளியே…
குளு குளு பனி துளியே…
முத்து முத்து பனி துளியே…
முத்தம் இடும் பனி துளியே…

—BGM—

பெண் : கால்கள் இன்றியே நதி நடந்து போகையில்…
கொலுசு சத்தம் கேட்பதெப்படி…
கைகள் இன்றியே காற்று கழுவும் வேளையில்…
சருகும் மெல்ல சிரிப்பதெப்படி…

பெண் : நெடுஞ்சாலையில் நிற்கும் மரங்களே…
நீங்கள் நடக்க சொல்வதெப்படி…
உங்கள் முகங்கள் எங்க உள்ளது… ஆஹா…

ஆண் : மரங்கள் என்பதென்ன…
மண்ணுக்கு அதுவொரு குடை…
விண்ணுக்கு அதுவொரு குடை…
உனக்கும் எனக்கும் விசிறிதான்…

பெண் : குட்டி குட்டி பறவைகளே…
குறு குறு பறவைகளே…
சுட்டி சுட்டி பறவைகளே…

பெண் : குட்டி குட்டி பறவைகளே…
சத்தம் இடும் பறவைகளே…

—BGM—

பெண் : வானம் நூலாகும் மேகம் எல்லாம் புத்தகம்…
யார் படித்து களைத்து போட்டதோ…
எங்கே திருவிழா குடும்பத்தோட பறவைகள்…
திருவிழாவும் பார்க்க போகுதோ…

பெண் : ஏ கிளியே உன் உதட்டிலே தினம் உதட்டு சாயம் பூசினாய்…
அது எந்த கடையில் வாங்கினாய் சொல்வாய்…

பெண் : அஞ்சுமணி அஞ்சுமணி எழுப்பிட யாருமில்லை…
மொட்டு விட்டு மலர்க்கொடி கண் விழிப்பதெப்படி…

பெண் : குட்டி குட்டி மரம் செடியே…
செடியே செடியே…
குளு குளு நதி அலையே… யே யே யே…

பெண் : புத்தம் புது புல் வெளியே… ஓஹோஓ…
புல் உறங்கும் பனி துளியே… யே யே யே…

பெண் : அட உங்களுக்குள் யாரும் அழகி போட்டி வைத்தால்…
உங்கள் அனைவரையும் அழகி என்று தேர்ந்தெடுப்பேன்…

—BGM—


Notes : Kutti Kutti Pani Thuliye Song Lyrics in Tamil. This Song from Manadhai Thirudivittai (2001). Song Lyrics penned by Pa.Vijay. குட்டி குட்டி பனித்துளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading