கோழி கூவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவசிதம்பரம் &கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வந்தேன் வந்தேன் வந்தேன்…
கதையின் சூத்திரதாரி…
தந்தேன் தந்தேன் தந்தேன்…
வணக்கம் சபையினை நாடி…

ஆண் : காதல் தேவதை போலே…
இங்கொரு பெண் சிலை ஒன்று…
கண்ணில் இத்தனை சோகம் வந்தது…
ஏன் அதில் இன்று…

ஆண் : அழகான மணவாளன் காதலின் வசமானாள்…
உயிரோடு உயிர் சேர்ந்து அன்றிலைப் போலானாள்…

ஆண் : இரவெல்லாம் முதலிரவாக…
அவர் வாழும் ஒரு நாள் காலையில்…
துயில் மேவும் அவள் மணவாளன்…
தனை மங்கை எழுப்புகின்றாள்…

—BGM—

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…

பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…

—BGM—

ஆண் : ஒரு நாழி இன்னும் கொஞ்சம் மயிலே மயிலே…
உந்தன் இடையோடு விளையாட ஒத்துக்கொள்ளம்மா…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

ஆண் : தண்ணீரில் தள்ளாடும் ஓடம் போலே…
அம்மாடி என் நெஞ்சம் தள்ளாடுதே…
நெத்திலி மீனே மைவிழி மானே…
நெஞ்சிலே சாச்சுக்கோ…

பெண் : அட கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

—BGM—

ஆண் : எப்போதும் மீனுண்டு கடலிலதான் காதலியே…
கடல் எங்கே போய் விடும் சொல்லு…

பெண் : ஐயோ… கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

ஆண் : ஹேய்… ஓடத்தை ஒட்டியே களைப்பாகி போனேன்…
ராசாத்தி முழு நாளும் ரசமாக இருக்கோணும்…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

—BGM—

ஆண் : காதலி சொன்னது வேதம் என்று…
புயல் வரும் வேளையில் அவன் போனான்…
இந்திய எல்லையை தாண்டும் போது…
பாவிகள் சுட்டதில் பலியானான்…

—BGM—

ஆண் : காதலன் மாண்டான் மீனவர் சொன்னார்…
எனினும் அவள் மனம் நம்பாது…
ஒரு தினம் வருவான் தலைமகன் என்றே…
தனிமையில் ஆடி சிலையானாள்…

—BGM—


Notes : Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. கோழி கூவும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading