கூட மேல கூட வச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவந்தனா ஸ்ரீனிவாசன் & வி. வி. பிரசன்னாடி. இமான்ரம்மி

Koodamela Koodavechi Song Lyrics


ஆண் : கூட மேல கூட வச்சி
கூடலூரு போறவளே….
உன் கூட கொஞ்சம்
நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன….

ஆண் : ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா……

ஆண் : நீ வேணான்னு சொன்னாலே
போவேன்டி சேதாரமா…..

பெண் : கூட மேல கூட வச்சு
கூடலூரு போறவள…..
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன….

பெண் : ஒத்துமையா நாமும் போக
இது நேரமா….
பூவ தாள தேச்சி வச்ச
துரு ஈரமா…..
நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன் தாரமா…..

பெண் : நீ தாயேன்னு கேட்காம
தாறேனே தாராளமா…….ஆ….ஆ…

—BGM—

பெண் : சாதத்துல கல்லு போல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற…

ஆண் : சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுற…..

பெண் : அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடைபின்னுறேன்….

ஆண் : சல்லி வேர
ஆணி வேராக்குற….
சட்ட பூவ
வாசமா மாத்துற…..

பெண் : நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுறேன்……

ஆண் : கூட மேல கூட வச்சி
கூடலூரு போறவளே…

பெண் : நீ கூட்டிகிட்டு
போக சொன்னா
என்ன சொல்லும்
ஊரும் என்ன…

—BGM—

ஆண் : எங்கவேணா போயிகோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே….

பெண் : தண்ணியத்தான் விட்டு புட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தல சாயுமே…..

ஆண் : மறைஞ்சு போனாலும்
மறந்து போகாத
நினைப்புதான் சொந்தமே….

பெண் : பட்ட தீட்ட தீட்ட தான்
தங்கமே…..
உன்ன பாக்க பாக்கத்தான்
இன்பமே….

ஆண் : நீ பாக்காம போனாலே
கிடையாதே மறு ஜென்மமே…

ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு….
கூடலூரு போறவளே…

பெண் : நீ கூட்டிகிட்டு
போக சொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன…..

ஆண் : ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா…
உன்னுடனே நானும் வாரேன்
ஒரு ஓரமா…..

பெண் : நான் போறேன்னு
சொல்லாம வாறேனே
உன் தாரமா….

நீ தாயேன்னு கேட்காம…
தாறேனே தாராளமா…

—BGM—


Notes :  Koodamela Koodavechi Song Lyrics in Tamil. This Song from Rummy (2014). Song Lyrics penned by Yugabharathi. கூட மேல கூட வச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading