கொஞ்ச நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆஷா போஸ்லே & மது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்சந்திரமுகி

Konjam Neram Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

ஆண் : கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்…
எல்லை மீறக் கூடாதா…
இந்த நேரம் இன்ப நேரம்…
இன்னும் கொஞ்சம் நீளாதா…

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

—BGM—

பெண் : கண்ணில் ஓரழகு…
கையில் நூறழகு…
உன்னால் பூமி அழகே…

ஆண் : உன்னில் நானழகு…
என்னில் நீயழகு…
நம்மால் யாவும் அழகே…

பெண் : ஹோ… கண்ணதாசன் பாடல்வரி போல…
கொண்ட காதல் வாழும் நிலையாக…

ஆண் : கம்பன் பாடிப் போன தமிழ்ப் போல…
இந்த நாளும் வேகம் நலமாக…

பெண் : மழை நீயாக…
வெயில் நானாக…
வெள்ளாமை நீ… ஆஆ…

ஆண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

—BGM—

பெண் : லாலா லாலா லாலா லாலா லா…
லாலா லாலா லாலா லாலா லா…
லாலா லாலா லாலா லா…

—BGM—

ஆண் : கொக்கிப் போடும் விழி…
கொத்திப் போகும் இதழ்…
நித்தம் கோலம் இடுமா…

பெண் : மக்கள் யாவரையும்…
அன்பில் ஆளுகின்ற…
உன்னைப் போல வருமா…

ஆண் : வெளி வேஷம் போட தெரியாமல்…
எனதாசை கூட தடுமாறும்…

பெண் : ஹம்… பல கோடி பேரின் அபிமானம்…
உனக்காக ஏங்கும் எதிர்காலம்…

ஆண் : நீ என் நாடு…
நான் உன்னோடு…
மெய்தானே இது… ஆஆஆ…

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்…
கொஞ்சிப் பேசக் கூடாதா…
அந்த நேரம் அந்தி நேரம்…
அன்புத் தூறல் போடாதா…

ஆண் : கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்…
எல்லை மீறக் கூடாதா…

பெண் : இந்த நேரம் இன்ப நேரம்…
இன்னும் கொஞ்சம் நீளாதா… ஆஆ…


Notes : Konjam Neram Song Lyrics in Tamil. This Song from Chandramukhi (2005). Song Lyrics penned by Yugabharathi. கொஞ்ச நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading