கொடியிலே மல்லியப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாகடலோரக் கவிதைகள்

Kodiyile Malligai Poo Song Lyrics in Tamil


ஆண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே…
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே…

ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே…
பவழமல்லித் தோட்டம்…
நெருங்க விடவில்லையே…
நெஞ்சுக்குள்ள கூச்சம்…

பெண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே…
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மனசு தடுமாறும்…
அது நெனைச்சா நிறம் மாறும்…
மயக்கம் இருந்தாலும்…
ஒரு தயக்கம் தடை போடும்…

ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு…
நெஞ்சுக்குழி காயும்…
மாடு ரெண்டு பாதை ரெண்டு…
வண்டி எங்கே சேரும்…

பெண் : பொத்தி வச்சா அன்பு இல்ல…
சொல்லிப்புட்டா வம்பு இல்ல…
சொல்லத்தானே தெம்பு இல்ல…
இன்ப துன்பம் யாரால…

BGM

ஆண் : பறக்கும் திசையேது…
இந்த பறவை அறியாது…
உறவோ தெரியாது…
அது உனக்கும் புரியாது…

பெண் : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு…
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காலம் வரும் வேளையிலே…
காத்திருப்பேன் பொன்மயிலே…

பெண் : தேதி வரும் உண்மையிலே…
சேதி சொல்வேன் கண்ணாலே…

பெண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே…
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே…

பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே…
பவழமல்லித் தோட்டம்…
நெருங்க விடவில்லையே…
நெஞ்சுக்குள்ள கூச்சம்…

ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே…
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே…


Notes : Kodiyile Malligai Poo Song Lyrics in Tamil. This Song from Kadalora Kavithaigal (1986). Song Lyrics penned by Vairamuthu. கொடியிலே மல்லியப்பூ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading