கண்ணோரமாய் கதை பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Kannoramai Kathai Pesu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு…

ஆண் : தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா…

பெண் : வில்லை ஏந்திடும் வீரா…
வேட்டையாட வந்தீரா…

ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை…
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன…

பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்…
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன…

ஆண் : கண்ணோரமாய் கதை பேசு…
பெண் : காதல் அம்பை நீ வீசு…

—BGM—

ஆண் : கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம்…
கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம்…
அன்பின் அருவியே கண்களானதோ…

—BGM—

பெண் : சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும்…
எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும்…
அமுதசுரபியே உள்ளமானதோ…

ஆண் : உள்ளங்கையில்தான் அன்பே…
உன் முகம் பார்த்தேனே…

பெண் : உயிரின் நிழலாக அன்பே…
உன்னைப் பார்த்தேனே…

ஆண் : ஒரு கோடி காலம் வாழ…
உன் மடி கேட்டேனே…

—BGM—

பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
ஆண் : காதல் அம்பை நீ வீசு…

—BGM—

ஆண் : வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும்…
வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும்…
உள்ளம் கேட்டு நான் உன்னை கெஞ்சினேன்…

—BGM—

பெண் : மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும்…
மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும்…
நானும் வாழவே உன்னைக் கேட்கிறேன்…

ஆண் : உலகின் அழகெல்லாம் அன்பே…
உன்னில் பார்த்திடவா…

பெண் : இதயத் துடிப்பெல்லாம் அன்பே…
உன் பெயர் கேட்டிடவா…

ஆண் : என்னுயிரே நீயாய் ஆனால்…
மரணம் ஜெயித்திடுவேன்…

—BGM—

பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு…

ஆண் : தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா…

பெண் : வில்லை ஏந்திடும் வீரா…
வேட்டையாட வந்தீரா…

ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை…
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன…

பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்…
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன…

—BGM—


Notes : Kannoramai Kathai Pesu Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Kalai Kumar. கண்ணோரமாய் கதை பேசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading