கண்ணில் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாபூவிலங்கு

Kannil Edho Minnal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…

பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…

ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…

—BGM—

பெண் : என்ன சொல்லி விளக்கு எனக்கிது புதுசு…
இடைவெளி இல்லாமே துடிக்குது மனசு…

ஆண் : காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு…
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு…
காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு…
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு…
இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா என்னாவது…

ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…

—BGM—

ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு…
பொட்டுக் கொஞ்சம் அழியும்…
குங்குமத்துச் செவப்ப வெட்கம் போல வழியும்…

பெண் : அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே…
அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே…
அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே…
அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே…
பெண்மை இங்கே போட்டுக் கொள்ள தாழ்ப்பாள் இல்லே…

பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…

ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…

பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
ஆண் : காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…


Notes : Kannil Edho Minnal Song Lyrics in Tamil. This Song from Poovilangu (1984). Song Lyrics penned by Vairamuthu. கண்ணில் ஏதோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading