கண்ணான கண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம்டி. இமான்விஸ்வாசம்

Kannaana Kanney Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நான் காத்து நின்றேன்…
காலங்கள் தோறும்…
என் ஏக்கம் தீருமா…

ஆண் : நான் பார்த்து நின்றேன்…
பொன் வானம் எங்கும்…
என் மின்னல் தோன்றுமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்…
கண்ணீர் சேரும்…
கற்கண்டாய் மாறுமா…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

BGM

ஆண் : ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ…. ஆஅ…. ஆஅ…. ஆ..

ஆண் : அலை கடலின் நடுவே…
அலைந்திடவா தனியே…
படகெனவே உனையே…
பார்த்தேன் கண்ணே….

ஆண் : புதை மணலில் வீழ்ந்து…
புதைந்திடவே இருந்தேன்…
குறு நகை எரிந்தே…
மீட்டாய் என்னை…

ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்…
பெரும் ஊஞ்சல்… மனதோரம்…
கண்பட்டு நூல் விட்டு போகும்…
என ஏதோ… பயம் கூடும்…

ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்…
மழையாகி ஆடினேன்…
இந்த உற்சாகம் போதும்…
சாக தோன்றும்… இதே வினாடி…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நீ தூங்கும் போது…
உன் நெற்றி மீது…
முத்தங்கள் வைக்கணும்…

ஆண் : போர்வைகள் போர்த்தி…
போகாமல் தாழ்த்தி…
நான் காவல் காக்கணும்…
எல்லோரும் தூங்கும் நேரம்…
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்…

ஆண் : ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…


Notes : Kannaana Kanney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Thamarai. கண்ணான கண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading