கஞ்சா பூவு கண்ணால

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கருமாத்தூர் மணிமாறன்சித் ஶ்ரீராம் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாவிருமன்

Kanja Poovu Kannala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கஞ்சா பூவு கண்ணால…
செப்பு செலை உன்னால…
இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால…

ஆண் : கஞ்சா பூவு கண்ணால…
செப்பு செலை உன்னால…
இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால…

ஆண் : உன் தட்டாங்காயி பல்லால…
நீ சொன்ன ஒத்த சொல்லால…
சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால…

ஆண் : கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா…
பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா…
கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா…
பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா…

ஆண் : ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா…
ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா…

ஆண் : கஞ்சா பூவு கண்ணால…
செப்பு செலை உன்னால…
இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால…

BGM

ஆண் : அந்தி நடுச்சாமம் எழுப்பி…
அந்த நட்சத்திரம் உலுப்பி…
உன் மூக்குல காதுல தோடா மாட்டி தொங்கவிடப்போறேன்…

ஆண் : அந்த ராத்திரியே கிள்ளி…
கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி…
உன் இமைய பூசும் கண்ணு மையா மாத்திக்கொண்டு நானும் வாரேன்…

ஆண் : மாடுக்குத்தி கிழிச்சாலும் பொழச்சுக்குவேன்டி…
உன் புருவக்கத்தி குத்திப்புட்டா என்ன செய்யுவேன்டி…
சூரிக்கத்தி வீசுனாலும் நிமிந்து நிப்பேன்டி…
உன் சுண்டு விரல் பட்டு போன சுணங்கி போவேன்டி…

ஆண் : நீ மனசு வச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி…
நீ மனசு வச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி…

ஆண் : கஞ்சா பூவு கண்ணால…
செப்பு செலை உன்னால…
இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால…

ஆண் : ஒன் தட்டாங்காயி பல்லால…
நீ சொன்ன ஒத்த சொல்லால…
சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால…

BGM


Notes : Kanja Poovu Kannala Song Lyrics in Tamil. This Song from Viruman (2022). Song Lyrics penned by Karumathur Manimaran. கஞ்சா பூவு கண்ணால பாடல் வரிகள்.


Scroll to Top