கண்களினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஷ் ராகவேந்திரா & ஜனனிபரத்வாஜ்பிரியசகி

Kangalinal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…

ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…

ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

BGM

ஆண் : ஒரு வாய் உணவும்…
உள் நோக்கி செல்லாமல்…
தொண்டையில் தர்ணா செய்யுதே… ஓஓ…

பெண் : சலிப்பே இல்லாத…
தலைப்பில் நான் பேச…
காதல் ஒன்று தான் உணர்ந்தேன் அறிந்தேன்…

ஆண் : உதடுகளால் வரம் கொடுப்பாய்…
ஒதுங்கி நின்றால் ஜுரம் கொடுப்பாய்…

பெண் : சருகென நான் இருக்கயிலே…
நெருப்பு வைத்தாய் விழிகளிலே…

ஆண் : உன் மாதிரி உன் மாதிரி…
பெண் இந்த உலகில் இல்லை… ஓஹோஹோஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

BGM

பெண் : இலவம் பஞ்சிலே செய்திட்ட மேலாடை…
இரும்பாய் கணக்குது அய்யோ… ஹாஹாஹோ…

ஆண் : இரவில் தனியாய் இருக்கும் போதெல்லாம்…
ஐந்தாறு தலை அணை கிழித்தேன்… ஓஓ…

பெண் : உந்தன் நகத்தால் மெல்ல கிறுக்கி…
துடிக்க வைத்தாய் செல்ல பொறுக்கி…

ஆண் : குருதி எல்லாம் குளிர வைத்தாய்…
நரம்பை எல்லாம் அதிர வைத்தாய்…

பெண் : என் தேசத்தில் சந்தோஷத்தில்…
கல் கூட பூ பூக்குதே… ஓஹோஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…

ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…

ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…


Notes : Kangalinal Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. கண்களினால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading