கனவா இல்லை காற்றா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்ரட்சகன்

Kanava Illai Kaatra Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவா இல்லை காற்றா…
கனவா… நீ காற்றா…

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இப்படி உன்னை ஏந்தி கொண்டே…
இந்திர லோகம் போய் விடவா…
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்…
சந்திர தரையில் பாயிடவா…

BGM

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

BGM

ஆண் : நிலவில் பொருள்கள் எடை இழக்கும்…
நீரிலும் பொருள் எடை இழக்கும்…
காதலில் கூட எடை இழக்கும்…
இன்று கண்டேனடி…
அதை கண்டு கொண்டேனடி…

ஆண் : நிலவில் பொருள்கள் எடை இழக்கும்…
நீரிலும் பொருள் எடை இழக்கும்…
காதலில் கூட எடை இழக்கும்…
இன்று கண்டேனடி…
அதை கண்டு கொண்டேனடி…

ஆண் : காதல் தாய்மை இரண்டு மட்டும்…
பாரம் என்பதை அறியாது…
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்…
பசியோ வலியோ தெரியாது…

ஆண் : காதல் தாய்மை இரண்டு மட்டும்…
பாரம் என்பதை அறியாது…
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்…
பசியோ வலியோ தெரியாது…

ஆண் : உன்னை மட்டும் சுமந்து நடந்தால்…
உயரம் தூரம் தெரியாது…
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்…
உயரம் தூரம் தெரியாது…

ஆண் : உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்…
என்னால் தாங்க முடியாது…

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

ஆண் : கனவா… நீ காற்றா…
கனவா… நீ காற்றா…


Notes : Kanava Illai Kaatra Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. கனவா இல்லை காற்றா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading