கடோத்கஜா கடோத்கஜா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர்தேவாபம்மல் கே. சம்பந்தம்

Gadothkaja Gadothkaja Song Lyrics in Tamil


—BGM—

குழு : சிரித்த முகம்…
அழகு சிரித்த முகம்…
தேயாத முழு நிலவே…
ஓயாத அலை காட்டும்…
சிரித்த முகம்…
அழகு சிரித்த முகம்…

—BGM—

பெண் : கடோத்கஜா கடோத்கஜா…
கடோத்கஜா கலாதரா…
விவாகமே விடாதுடா…

பெண் : இன்றோடு ஹனுமார் பக்தன்…
பிரம்ம சாரியம் முடிகிறதே…

—BGM—

பெண் : அன்போடு கை தளம் பற்ற…
கன்னி நிலா தான் வருகிறதே…

பெண் : ஆயிரத்தில் ஒருவன் என்று…
அழகன் என்று அறிஞன் என்று…
ஆசை வைத்த இள மான்…
நீயே கிடைத்தாயே…

ஆண் : ஆனவரை விழியால் பேசு…
மௌனம் என்னும் மொழியால் பேசு…
ஆக மொத்தம் அன்பே…
உனக்கு நான் தான் நாயகனே…

ஆண் : கடோத்கஜான் கலாதரன்…
கண்ணே உந்தன் கையில் சரண்…

—BGM—

ஆண் : டிக் டிக் என்று சத்தம் உன்னாலே…
என்னுள்ளே கேட்கின்றதே கண்ணே…

—BGM—

பெண் : பக் பக் என்று அஞ்சி உன்னாலே…
என் உள்ளம் வேகின்றதே கண்ணா…

ஆண் : ஒரே நாளில் காதல் நோய்தான்…
உன்னால் வந்ததே தோழி…

பெண் : ஒரே ஊசி போட்டால் போதும்…
உயிர் வாழுமே தோழனே… தோழனே…

ஆண் : ஓ… மாலையிட ஒரு நாள் பார்த்து…
மண நாள் பார்த்து திருநாள் பார்த்து…

பெண் : சேலை தொடும்…
மறு நாள் வந்து மறுப்பேனா…

ஆண் : காலை நெஞ்சம் கேட்காதம்மா…
கடிகாரம் தான் பார்க்காதம்மா…
காற்று என்ன நேரம் பார்த்தா…
நதியில் குளிக்கிறது…

பெண் : கடோத்கஜா… கடோத்கஜா…

—BGM—

ஆண் : தையல் போட்டு என்னை தைத்தாயே…
தையல் இனி உன்னோடுதான் கண்ணே…

—BGM—

பெண் : கையை போட்டு என்னை கையாட…
கை சேரு என்னோடுதான் கண்ணா…

ஆண் : விழி மேய்ந்து ஓயும்போது…
விரல் மேயுமே தோழி…
கோடி பூவும் கூச்சம் கொண்டு…
மடி சாயுமே தோழியே… தோழியே…

பெண் : பூங்கரத்து வலையாடாதா…
வலையாடதான் விளையாடாதா…
வாய் சிவப்பு உன்னால் கொஞ்சம் வெளுக்காதா…

ஆண் : நேற்று வரை அடைத்தே வைத்த…
மடையை நீதான் உடைத்தாய் இன்று…
பாவி மனம் பாயை போட…
பாடாய் படுத்திறதே…

பெண் : கடோத்கஜா கலாதரா…
விவாகமே விடாதுடா…

பெண் : இன்றோடு ஹனுமார் பக்தன்…
பிரம்ம சாரியம் முடிகிறதே…

—BGM—

பெண் : அன்போடு கை தளம் பற்ற…
கன்னி நிலா தான் வருகிறதே…

பெண் : ஆயிரத்தில் ஒருவன் என்று…
அழகன் என்று அறிஞன் என்று…
ஆசை வைத்த இள மான்…
நீயே கிடைத்தாயே…

ஆண் : ஆனவரை விழியால் பேசு…
மௌனம் என்னும் மொழியால் பேசு…
ஆக மொத்தம் அன்பே உனக்கு…
நான்தான் நாயகனே…

பெண் : கடோத்கஜா… கடோத்கஜா…


Notes : Gadothkaja Gadothkaja Song Lyrics in Tamil. This Song from Pammal K Sambandam (2002). Song Lyrics penned by Vaali. கடோத்கஜா கடோத்கஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading