கலவரமே காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபிரதீப் & சின்மயிஎன். கண்ணன்தமிழ் படம் 2

Kalavarame Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கலவரமே காதல் கலவரமே…
கனவிலுமே உந்தன் முகம் வருமே…
அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா…

ஆண் : இளமரமே ஆசை கனி மரமே…
இவனிலுமே அதுவே நிலவரமே…
உடல் கோர்க்க உயிர் சேர்க்க…
வா இணைய வா வா…

பெண் : வா இது திருமணம் வரை மட்டும்…
ஆண் : அதன் பிறகு…
பெண் : வேண்டாமே…
ஆண் : தமிழ் கலாச்சாரம் எல்லாம் எங்கே எங்கே…
பெண் : ஹ்ம்ம் ம்ம்…

பெண் : கலவரமே காதல் கலவரமே…
கனவிலுமே உந்தன் முகம் வருமே…
அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா…

பெண் : தவறியும் எந்தன் கண்ணை…
பார்த்து பேசிவிடாதே…
அதை விட பாவம் ஒன்று மண்ணில் எதுவுமில்லை…

ஆண் : நிலவுகள் வானில் தோன்றின்…
மறந்திடும் விண்மீன் யாவும்…
அழகினை முழுதும் காண ஜென்மம் போதவில்லை…

பெண் : ஆ… தொல்லை இல்லாத காதல்…
எல்லை இல்லாத காமம்…
ஆண் : பெண்ணை தேடி சென்று உன்னை கண்டேனே…

—BGM—

ஆண் : இலை மறை காயாய் பேசும்…
கலை அது என்னில் இல்லை…
சபலங்கள் எல்லாம் சொன்னேன்…
என்னை குழந்தை என்றாய்…

பெண் : அச்சம் மடம் நாணம் எல்லாம்…
மிச்சமென ஏதும் இல்லை…
உச்சம் தொட நானும் சென்றேன்…
கண்டே வியந்து நின்றாய்…

ஆண் : மனிதர் உணர்ந்து கொள்ள…
மனித காதல்அல்ல…
பெண் : விண்ணை தாண்டி செல்ல உறவே வருவாயா…

—BGM—

ஆண் : இளமரமே ஆசை கனி மரமே…
இவனிலுமே அதுவே நிலவரமே…
உடல் கோர்க்க உயிர் சேர்க்க…
வா இணைய வா வா…

பெண் : வா இது திருமணம் வரை மட்டும்…
ஆண் : அதன் பிறகு…
பெண் : வேண்டாமே…
ஆண் : தமிழ் கலாச்சாரம் எல்லாம் எங்கே எங்கே…
பெண் : ஹ்ம்ம் ம்ம்…


Notes : Kalavarame Song Lyrics in Tamil. This Song from Tamizh Padam 2 (2018). Song Lyrics penned by Madhan Karky. கலவரமே காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading