காதலிக்க பெண்ணொருத்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்எம்சி ஜெஸ், நரேஷ் ஐயர், ஆண்ட்ரியா ஜெரெமையா & ஷர்மிளாவிஜய் ஆண்டனிவெடி

Kadhalikka Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே…
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே…
யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ…
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ…

பெண் : மன்மதனின் தாய்மொழி நான்…
மீசை இல்லா மின்மினி நான்…
தித்தித்திடும் தீக்குச்சி நான்…
தென்றலுக்கு தங்கச்சி நான்…

ஆண் : காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே…
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே…
யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ…
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ…

—BGM—

ஆண் : நான் ஒரு விண்மீனை கண்டேனடி பகலில்…
பெண் : ஓஹோ ஓஓ…
ஆண் : நீ இவன் கண்ணுக்குள் கை தட்டினாய் இரவில்…
பெண் : திகு சிக்…

ஆண் : கூந்தல் வீசி தூண்டில் போட்டால்…
மீசை யாவும் மீனாய் மாட்டும்…
பாம்பை போல பார்வை பார்த்து…
ஆணின் நெஞ்சை கோதாதே…

ஆண் : வீணை வேகம் யானை தந்தம்…
நீதான் எந்தன் ஆதி அந்தம்…
வெள்ளி பற்கள் வைர கற்கள்…
என்னை மென்று தின்னாதே…

ஆண் : காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே…
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே…
யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ…
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ…

—BGM—

ஆண் : யார் இவள்…
பூ பூத்த பூகம்பம் போல் அழகா…
ஆஹா… நான் இவள்…
வெப்பத்தில் விழுந்தேனடா மெழுகாய்…
பெண் : திகு சிக் திகு சிக்…

ஆண் : பூக்கள் எல்லாம் ஒவ்வோர் வண்ணம்…
பூவே உன்னில் ஏழு வண்ணம்…
கிள்ளி பார்க்க கைகள் நீளும்…
தள்ளி தள்ளி செல்லாதே…

ஆண் : வானம் விட்டு பூமி வந்த…
ஆதென் தோட்ட ஏஞ்சள் நீயோ…
பாதி கண்ணால் பார்த்து நெஞ்சை…
பத்த வச்சி கொல்லாதே…

ஆண் : காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே…
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே…
யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ…
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ…

பெண் : மன்மதனின் தாய்மொழி நான்…
மீசை இல்லா மின்மினி நான்…
தித்தித்திடும் தீக்குச்சி நான்…
தென்றலுக்கு தங்கச்சி நான்…

Notes : Kadhalikka Song Lyrics in Tamil. This Song from Vedi (2011). Song Lyrics penned by Kabilan. காதலிக்க பெண்ணொருத்தி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading