| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| மதுரகவி | ஜி வி பிரகாஷ் குமார் | மிதுன் ஈஸ்வர் | சரிகம தமிழ் |
Kadhali Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதலி காதலி உன்னை…
நீயிங்கு யாரென்று தெரியும்…
காதலி காதலி உலகை…
உன் நோக்கமே யாதென்று புரியும்…
ஆண் : பூலோகம் எல்லோருக்கும் பொதுவனது…
சிறு எறும்பும்தான் மண்மீது போராடுது…
நீயும் நானும் இங்கு பொம்மைதானே…
நம் நூலோ நம் கையிலே…
ஆண் : அத்து மீறி அச்சமின்றி ஓடு…
பூமியெங்கும் கால் பதி…
வாழ்கைக் காண எல்லைக் கூட்டைத் தேடு…
பாதம் செதுக்கினாள் பாதை நீளுமே…
—BGM—
ஆண் : மண்ணில் முளைக்கும் விதையைபோல்…
உந்தன் மனதில் முளைக்கும் வலிகள்…
எட்டு வைக்கும் கால்களுக்கு தெம்பு மூட்டுமே…
ஆண் : தோல்வி தொடங்கும் மனதில்…
தினம் வேள்வி நெருப்பு எரிந்தால்…
முயற்சிகள் வென்று காட்டுமே…
ஆண் : கண் திறந்து கனவோடு உறவாடு நீ…
கடல் மீதும் பயிர் செய்வாய் நீ…
ஆண் : நெற்றி வேர்வை சிந்தினாலே மண்ணில்…
வெற்றிப் பூக்கள் பூக்குமே…
நேரம் கண்டு முந்தினாலே வாழ்வின்…
வாசல் திறக்குமே தேடல் ஜெயிக்குமே…
—BGM—
Notes : Kadhali Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2024). Song Lyrics penned by Madhurakavi. காதலி காதலி பாடல் வரிகள்.


