காதல் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திரா & சின்மயியுவன் ஷங்கர் ராஜாஒரு கல்லூரியின் கதை

Kadhal Yenbathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…

பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

ஆண் : செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா…
இங்கு விழியின் வழிகளும் வரங்கள் அல்லவா…

பெண் : வரங்கள் என்பது அலைகள் அல்லவா…
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா…

ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…

பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

ஆண் : கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்…
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்…

ஆண் : உன்னை பார்க்கும் முன்பு நானே…
வெட்ட வெளியிலே திரிந்தேன்…
உன் அருகில் வந்து தான் என்…
வேடந்தாங்கலை உணர்ந்தேன்…

ஆண் : உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே…
நீ இன்றி நானே வெறும் கூடு தானே…
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை…
நீயே தந்தாய்…

ஆண் : காதல் என்பது கடவுள் அல்லவா…
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா…

பெண் : காதல் என்றால் பொய்கள் அல்லவா…
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா…

—BGM—

ஆண் : காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்…
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொளுத்தும்…

ஆண் : உந்தன் அருகில் நானும் இருந்தால்…
நிமிடம் நொடிகள் என கரையும்…
எனை விலகி நீயும் பிரிந்தால்…
நேரம் பாரமாய் கணக்கும்…

ஆண் : உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்…
உலகு கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்…
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்…

{ பெண் : காதல் வருவது புரிவதில்லையே…
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே…
பூக்கள் பூப்பதே தெரிவதில்லையே…
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே… } * (2)

—BGM—


Notes : Kadhal Yenbathu Song Lyrics in Tamil. This Song from Oru Kalluriyin Kathai (2005). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் என்பது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading