கண்கள் கண்டது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கே & சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாஒரு கல்லூரியின் கதை

Kangal Kandadhu Song Lyrics in Tamil


—BGM—

{ ஆண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே… } * (2)

{ ஆண் : மரத்தின் கிளைகளில் மலர்கள் கண்டேன்…
வாசம் மட்டும் காணவில்லை…
நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன்…
காலடி அங்கே தெரியவில்லை… } * (2)

ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…

ஆண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கானல் நீராய் மாறிடுதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலைகிறதே…

—BGM—

ஆண் : தோற்றம் திரும்பலாம் தொட்டு நெருங்கலாம்…
நிஜத்தின் காயங்கள் ஆறாதே…
மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம்…
மனதில் பெய்யும் மழை அடங்காதே…

ஆண் : அடுத்த நாட்கள் இங்கு பத்திரமாக…
நடந்த நாடகம் முடிகிறதே…
வாழ்ந்த வாழ்க்கையை திருப்பிதான் வாழ்ந்த…
நட்பு என் மனதில் நெகிழ்கிறதே…

ஆண் : அட தொப்புள் கொடியின் உறவைத்தான்…
என் நியாபகம் அறிந்தது இல்லை…
அந்த துயரம் தீர்த்த நண்பர்களே…
இந்த நட்புக்கு வானமே எல்லை…

ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…

—BGM—

ஆண் : கால சங்கிலி மீண்டும் இணையலாம்…
காதல் சங்கிலி இணையாதே…
காற்று பேசித்தான் விதைத்த வார்த்தைகள்…
கரைந்து போனது திரும்பாதே…

ஆண் : பிடித்த கவிதையை எடுத்து படிக்கையில்…
எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே…
மரணம் என்பது ஒரு முறை கொல்லும்…
காதல் பல முறை கொல்கிறதே…

ஆண் : நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே…
பல இரவும் பகலும் இங்கே…
அந்த நினைவுகள் போதும் வாழும் வரை…
என் நெஞ்சில் துயரம் இல்லை…

ஆண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
விடுகதைகள் புரியவில்லை…

{ பெண் : கண்கள் கண்டது கண்கள் கண்டது…
கண்ணீர் துளியில் கரையாதே…
கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை…
காற்றும் மோதிட கலையாதே… } * (2)

{ பெண் : மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்…
மறுபடி பூத்திட மறக்காதே…
மாலையில் சூரியன் மறைந்த பிறகும்…
மறுநாள் உதிக்கும் மறக்காதே… } * (2)

பெண் : ஒன்றாய் சிரித்து அழுத உறவின்…
தொடர் கதைகள் தெரிந்துகொள்வாய்…


Notes : Kangal Kandadhu Song Lyrics in Tamil. This Song from Oru Kalluriyin Kathai (2005). Song Lyrics penned by Na. Muthukumar. கண்கள் கண்டது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading